உலகில் சில உணவுகள் மிகவும் விலை உயர்ந்தவை. அவற்றை சாப்பிட வேண்டுமானால் நீங்கள் மில்லியனர் ஆக இருக்க வேண்டும். தர்பூசணி முதல் க்யாவியர் வரை, இந்தப் பட்டியலில் உலகின் மிக விலையுயர்ந்த உணவுகள் உள்ளன. இந்த உணவுகளின் விலை ஆயிரக்கணக்கான ரூபாயிலிருந்து லட்சக்கணக்கான ரூபாய் வரை இருக்கும்.
உலகின் மிக விலையுயர்ந்த உணவுகளில் ஒன்று கருப்பு தர்பூசணி. இது ஜப்பானை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தனித்துவமான பழம். இது டென்சுகே தர்பூசணி என்றும் அழைக்கப்படுகிறது. ஏலத்தில் கிட்டத்தட்ட நான்கரை லட்சம் ரூபாய் வரை செல்லும்
210
ஐபீரியன் ஹாம்
உலகின் சிறந்த ஹாம்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது கருப்பு பன்றிகளின் பின்னங் கால்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதை 24 முதல் 36 மாதங்கள் வரை பதப்படுத்த வேண்டும். ஐபீரியன் ஹாமின் முழு காலுக்கும் நீங்கள் 3 லட்சத்திற்கும் மேல் செலவழிக்க வேண்டும்.
310
மூஸ் சீஸ்
மூஸ் சீஸ் உலகின் மிக விலையுயர்ந்த சீஸ்களில் ஒன்றாகும். 5 லிட்டர் பாலில் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 300 கிலோ சீஸ் மட்டுமே ஸ்வீடனில் உள்ள மூஸ் ஹவுஸ் பண்ணையில் விற்கப்படுகிறது.
410
அயம் செமானி கருங்கோழி
அயாம் செமானி கருங்கோழி இந்தோனேசியாவில் வளர்க்கப்படுகிறது. இது மிகவும் அரிதான கோழி இனம். ஒரு கோழியின் விலை கிட்டத்தட்ட 14,661 ரூபாய்க்கும் மேல். இந்தோனேசியாவிற்கு வெளியே விலை ஆயிரக்கணக்கான டாலர்கள்.
510
குங்குமப்பூ
ஆசியா மற்றும் மத்தியதரைக் கடல் பகுதியில் குங்குமப்பூ பரவலாக வளர்க்கப்படுகிறது. பல்வேறு வகையான உணவுகளில் பயன்படுத்தப்படும் இந்த சுவையான மசாலா ஒரு தனித்துவமான, இனிமையான நறுமணத்தை வெளிப்படுத்துகிறது.
610
வெண்ணிலா
மடகாஸ்கர் வெண்ணிலா காய்களில் 1 முதல் 2 சதவீதம் வெண்ணிலின் உள்ளது. ஒரு பவுண்டுக்கு கிட்டத்தட்ட 43,900 ரூபாய் விலை. இது உலகின் மிகவும் கடினமான பயிர்களில் ஒன்றாகும்.
710
கோபி லுவாக் காபி
உலகில் மிக விலையுயர்ந்தது லுவாக் காபி. இந்த காபி பீன்ஸ் ஒரு கிலோ கிட்டத்தட்ட 52,000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இது சிவெட் பூனை அல்லது ஆசிய பனை சிவெட் பூனையால் பகுதியளவு ஜீரணிக்கப்பட்டு, வெளியேற்றப்படும் காபி பீன்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
810
மட்சுடேக் காளான்
மட்சுடேக் காளான்கள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அறுவடை செய்யப்படுகின்றன. பைன் மர நூற்புழு பூச்சி இந்த தாவரங்களை அழிக்கும் அபாயம் எப்போதும் உள்ளது. இது உலகின் மிக விலையுயர்ந்த காளான், ஒரு கிலோவிற்கு 43,985 ரூபாய் வரை கிடைக்கும்.
910
வாக்யு மாட்டிறைச்சி
இது நான்கு வெவ்வேறு வகையான ஜப்பானிய மாடுகளிலிருந்து வருகிறது. வாக்யு மாட்டிறைச்சி அதன் கொழுப்புக்கு பிரபலமானது. ஒரு கிலோவிற்கு கிட்டத்தட்ட 40,000 ரூபாய். ஏனென்றால் இந்த மாடுகளை வளர்ப்பதற்கு மிகவும் செலவாகும்.
1010
க்யாவியர்
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின்படி, பதிவு செய்யப்பட்ட மிக விலையுயர்ந்த க்யாவியர். இவை உலகின் மிகவும் சுவையான உணவுகளாகக் கருதப்படும் மீன் முட்டைகள்.