ரேஷன் அரிசில பஞ்சு போன்ற இட்லி!! மாவு அரைக்க சூப்பர் டிப்ஸ்..

Published : Feb 01, 2025, 04:26 PM IST

Soft Idli In Ration Rice : ரேஷன் அரிசியில் இட்லி பஞ்சு போல சூப்பராக வர மாவை அரைப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

PREV
14
ரேஷன் அரிசில பஞ்சு போன்ற இட்லி!! மாவு அரைக்க சூப்பர் டிப்ஸ்..
ரேஷன் அரிசில பஞ்சு போன்ற இட்லி!! மாவு அரைக்க சூப்பர் டிப்ஸ்..

இட்லி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் இட்லி தன் ரொம்பவே பிடிக்கும். இட்லி ஜீரணிப்பது எளிதாக இருக்கும் என்பதால் பலரும் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். இட்லியுடன் சாம்பார், சட்னி, இட்லி பொடி ஆகியவற்றை வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். பொதுவாக சிறு குழந்தைகள் கர்ப்பிணிகள், வயதானவர்கள், காய்ச்சல் உள்ளவர்கள், மருத்துவமனையில் இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு இட்லி தான் சாப்பிட கொடுப்பார்கள். இது அவர்களுக்கு ஜீரணத்தை கொடுக்கும் ஒரு நல்ல உணவாகும். இட்லியில் பலவிதமான வகைகள் உள்ளன. அதாவது காஞ்சிபுரம் இட்லி, மினி இட்லி, வெஜிடபிள் இட்லி, பொடி இட்லி என நிறைய உள்ளன. 

24
ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி செய்வது எப்படி?

என்னதான் இட்லி அனைவருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்றாக இருந்தாலும், அது கல்லு மாதிரி இருந்தால் யாருமே விரும்பி சாப்பிட மாட்டார்கள். இட்லி பஞ்சு போல இருந்தால்தான் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், பலர் கடைகளில் வாங்கும் இட்லி அரிசியில் தான் இட்லி பஞ்சு போல வரும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ரேஷன் வாங்கும் அரிசியிலும் கூட அஞ்சு மாதிரி இட்லி அவிக்கலாம் தெரியுமா? எனவே ரேஷன் அரிசியிலும் இட்லி பஞ்சு மாதிரி வருவதற்கு மாவை எப்படி அரைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:  இட்லி சிறந்த உணவாக இருந்தாலும்  'இப்படி' சாப்பிட்டா மட்டும் தான் ஆரோக்கியம்..  இல்லன்னா வேஸ்ட்!!

34
தேவையான பொருட்கள்:

ரேஷன் அரிசி, பச்சரிசி, வெள்ளை உளுந்து, வெந்தயம்.

செய்முறை:

முதலில் அருகில் புழுங்கல் அரிசி ஒரு கிளாஸ் பச்சரிசி ஆகியவற்றை ஒன்றாக சேர்ந்து, நன்றாக கழுவி பிறகுசுமார் 2 மணி நேரம் ஊற வையுங்கள். அடுத்ததாக ஒரு கிளாஸ் உளுந்தம் பருப்பு ரெண்டு ஸ்பூன் வெந்தயம் இவை இரண்டையும் கழுவி, சும்மா ரெண்டு மணி நேரம் ஊற வைக்கவும்

இதையும் படிங்க:  தட்டில் ஒட்டாத பொசுபொசு பஞ்சு இட்லியை அவிக்க சூப்பரா '1' கிச்சன் டிப்ஸ்!! 

44
ரேஷன் அரிசியில் பஞ்சு போல இட்லி

இப்போது கிரைண்டர் அல்லது மிக்ஸியில் ஊறவைத்த உளுந்தை சேர்த்து நன்றாக மையாக அரைத்து, அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஊறவைத்த அரிசியையும் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக அரைக்க வேண்டும். இப்போது அடைத்து வைத்த இரண்டு மாவையும் ஒரே பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கலக்கி, அதில் சிறிதலும் உப்பு சேர்த்து இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள். பின் மறுநாள் காலையில் பார்த்தால் இட்லி மாவு நன்கு உப்பி போயிருக்கும். இப்போது இந்த மாவில் இட்லி அவித்து எடுத்தால் இட்லி பஞ்சு போல இருக்கும். இந்த முறையை ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். உங்கள் காசை மிச்சப்படுத்தலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories