
இந்தியா தனது 76 ஆவது குடியரசு தினத்தை நாளை (ஜன. 26) கொண்டாடுகிறது. இந்நாளில் தான் நம்முடைய நாடு இறையான்மை கொண்ட ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டது. குடியரசு நாளில் புதுடெல்லியில் நடக்கும் ராணுவ அணிவகுப்பை நாம் நம்முடைய வீட்டிலிருந்த படி டிவியில் பார்த்து கண்டுகழிப்போம். இத்தகைய சூழ்நிலையில், இந்நாளில் ஒரு அருமையான விருந்தை அனுபவிக்க விரும்பினால், உங்களுக்காக தேசியக் கொடியில் இருக்கும் மூவர்ணத்தில் சில சிம்பிள் ரெசிபிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
மூவர்ண சாண்ட்விச்:
இதற்கு 4 பிரட், வெள்ளரி, சீஸ், கேரட், கீரை, மயோனஸ் மற்றும் வெண்ணெய் தேவைப்படும். இப்போது பிரெட் துண்டுகள் மீது வெண்ணை தடவவும், ஒரு பிரட் தூண்டில் வெள்ளரி, கீரை மற்றும் சீஸ் வைக்கவும். அதுபோல மற்றொன்றில்
துருவிய கேரட் மற்றும் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு மூவர்ண வண்ணத்தில் அடிக்கு அதன் மேல் வெண்ணை தடவி பிரட்டை ஸ்லைசாக வைத்து நன்றாக அழுத்தவும். மூவர்ண சாண்ட்விச் ரெடி.
மூவர்ண புலாவ்:
இது இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று. அந்த வகையில் மூவரணத்தில் புலாவ் செய்ய விரும்பினால் முதலில், வெள்ளை சாதத்தை இரண்டு மூன்று சம பங்குகளாக பிரிக்கவும். அவற்றில் ஒரு பாதியில் சிவப்பு நிற ஃபுட் கலர் சேர்க்கவும். மற்றொன்றில் புதினா அல்லது கொத்தமல்லி பேஸ்ட் சேர்த்து கிளறவும். பின் மூவர்ணத்தில் அடுக்கி நடுவில் கிராம்பு வைத்து சூடாக பரிமாறுங்கள்.
மூவர்ண ஸ்மூத்தி:
இந்த சுமதி செய்ய மாம்பழம் வாழைப்பழம் கீரை தயிர் அல்லது தேங்காய் பால் தேவைப்படும் ஸ்மூத்திக்கு மூன்று வெவ்வேறு அடுக்குகளை தயாரிக்கவும். ஆரஞ்சு அடுக்கு மாம்பழத்தை தயிர் அல்லது பாலுடன் கலக்கவும் பச்சை நிற அடுப்புக்கு கீரையை சிறிது தண்ணீர் அல்லது தயிருடன் கலக்கவும் வெள்ளை அடுக்குக்கு வாழைப்பழத்தை தயிர் அல்லது தேங்காய் பாலுடன் கலக்கவும் இப்போது மூவர்ணஸ் மூர்த்தியை செய்ய ஒரு கண்ணாடி கிளாஸில் மூவருணத்தின் படி ஊற்றவும் ஊற்றவும். அவ்வளவுதான் மூவர்ண ஸ்மூத்தி ரெடி.
இதையும் படிங்க: ஜனவரி 26 குடியரசு தினம் குறித்து யாருக்கும் தெரியாத சுவாரசியமான உண்மைகள்!!
மூவர்ணத்தில் இட்லி:
இட்லி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானது. மூவரணத்தில் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இட்லி செய்து கொடுக்க விரும்பினால் முதலில் இட்லி மாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கேரட், கீரை இரண்டையும் தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது இட்லி தட்டில் மூவரணத்தில் ஒவ்வொன்றாக ஊற்றி வேக வைத்து எடுக்கவும். இதனுடன் உங்களுக்கு விருப்பமான சட்னி வைத்து சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: குடியரசு தினம் 2025: பிரம்மாண்ட அணிவகுப்பு பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்!
மூவர்ண சாலட்:
இதை செய்வதற்கு உங்களுக்கு கேரட் வெள்ளரிக்காய் மற்றும் முள்ளங்கி தேவைப்படும் எடுத்து வைத்த காய்கறிகளை மெல்லிய துண்டுகளாக வெட்டி ஒரு தட்டில் வைக்கவும். இப்போது பச்சை நிறத்திற்கு வெள்ளரி வெள்ளைக்கு முள்ளங்கி மற்றும் ஆரஞ்சுக்கு கேரட். இதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் மிளகு சேர்த்து பரிமாறுங்கள்.