Breast Milk
குழந்தை பிறந்த உடன், சில தாய்மார்களுக்கு மிகவும் தாமதமாகவே பால் சுரக்கும். தவிர்க்க முடியாத நேரத்தில் பார்முலா பால் பயன்படுத்தினாலும், குழந்தைக்கு கட்டாயமாக 6 மாதத்திற்கு தாய் பால் தான் கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் எதிர்ப்பு சக்தியை தூண்டும். மருத்துவர்களும் தொடர்ந்து இதை தான் வலியுறுத்தி வருகிறார்கள்.
தாய் பால் சுரப்பதற்கு, தாய்மார்கள் அதிக அளவில் உணவு எடுத்து கொண்டாலும்... அதில் பால் சுரப்புக்கு தேவையான சில உணவுகளையும் சேர்த்து கொள்வது சிறந்தது. பால் அதிகமாக சுரக்க செய்யும் சில உணவுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
fenugreek
வெந்தய விதைகள்:
அனைவரது வீடுகளிலும் இருக்க கூடிய ஒரு பொருள் தான் இந்த வெந்தயம். இது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இந்த விதைகளில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் அதிகமாக உள்ளன. ஈஸ்ட்ரோஜன்கள் தாய் பால் சுரப்புக்கான ஹார்மோனை தூண்டுகிறது. இரும்பு சத்து, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் இது நிரம்பியுள்ளது. புதிதாக குழந்தை பெற்றவர்கள், வெந்தயத்தை பாலில் கலந்தோ, அல்லதை வெந்தய கஞ்சி, வெந்தய களி போன்றவற்றை வாரத்திற்கு 3 முறையாவது எடுத்து கொள்வது பால் அதிகரிக்க உதவும்.
வேகமாக கொழுப்பை குறைக்கும் 5 டேஸ்டி & ஹெல்த்தியான உணவுகள்!
Millet
தினை:
சமீப காலமாக தினை போன்ற சிறு தானியங்கள் அதிகம் விரும்பி சாப்பிடப்படுகிறது. இதில் இரும்பு, கால்சியம் மற்றும் புரோட்டீன் நிறைந்துள்ளது. எனவே தாய்ப்பால் சுரப்புக்கும், புதிய தாய் மார்களுக்கும் மியாகவும் அவசியமான மற்றும் முக்கிய ஊட்டச்சத்து நிறைந்த தானியமாக இது பார்க்கப்படுகிறது. 1 வயதை தாண்டிய குழந்தைகிகளுக்கு திணையால் செய்யப்பட்ட உணவுகளை கொடுப்பது சிறந்தது.
Oats
ஓட்ஸ்:
ஓட்ஸில் இரும்பு சத்து, நார்ச்சத்து மற்றும் புரதசத்து நிறைந்துள்ளது. இது பெண்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான சரியான உணவாக இருக்கும். அதோடு ஓட்ஸ் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதை பாலில் கலந்து நீங்கள் பருகுவதன் மூலம், குழந்தைகளுக்கு தேவையான பால் கிடைக்கும். இதனை செய்வதும் மிகவும் எளிமையானது.
ராஜ நாகங்கள் 100 வருடம் வாழுமா?
Chickpeas:
கொண்டைக்கடலை:
பொதுவாக வீட்டில், அடிக்கடி செய்யப்படும் ஒரு ஸ்னாக்ஸ் இது. அவித்த கொண்டை கடலை. புதிய தாய் மார்களுக்கு இது மிகவும் அவசியமான தானியம். கொண்டை கடலையில், அதிக புரதம் மற்றும் நார் சத்துக்கள் நிரம்பியுள்ளது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. அவை ஹார்மோன் சமநிலையை ஊக்குவிக்கின்றன மற்றும் தாய்ப்பாலை அதிகரிக்க உதவுகிறது.
Cinnamon
இலவங்கப்பட்டை:
இலவங்கப்பட்டை, பல அற்புதமான பலன்களை கொடுக்க கூடிய மூலிகை ஆகும். லவங்க பட்டையை தாய்மார்கள், மிதமான வெந்நீருடன் சேர்த்து பருகலாம், இது செரிமானத்தை தூண்டுவதுடன், புத்துணர்ச்சியை கொடுக்கும். அதே போல் தாய் பால் அதிகரிப்புக்கு உதவும். தினம் டீ மற்றும் சூப் போன்றவற்றில் லவங்க பட்டை தூள் சிறிதளவு சேர்த்து கொள்வது சிறந்தது.
அழகை கெடுக்கும் பொருள்கள்.. தெரியாம கூட முகத்திற்கு போடாதீங்க!