வளரும் குழந்தைகளுக்கு  காடை முட்டை..  நாட்டுக்கோழி முட்டையை மிஞ்சும் சத்து இருக்கு..

Published : Feb 05, 2025, 06:51 PM IST

Kadai Muttai Benefits : இந்த பதிவில் வளரும் குழந்தைகளுக்கு தினமும் காடை முட்டை கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

PREV
17
வளரும் குழந்தைகளுக்கு  காடை முட்டை..  நாட்டுக்கோழி முட்டையை மிஞ்சும் சத்து இருக்கு..
வளரும் குழந்தைகளுக்கு  காடை முட்டை..  நாட்டுக்கோழி முட்டையை மிஞ்சும் சத்து இருக்கு..

அசைவ உணவில் முட்டைக்கென தனி சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில் சமீப காலமாகவே அசைவ பிரியர்கள் பெரும்பாலானோர் நாட்டுக்கோழி முட்டைக்கு பதிலாக காடை முட்டை தான் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறார்கள். காரணம் என்னவென்றால், நாட்டுக்கோழி முட்டையை விட காடை முட்டையில் தான் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உண்மையில், காடை முட்டையானது ரொம்பவே சிறியதாக இருக்கும். அதுமட்டுமின்றி, அதன் முட்டை ஓட்டில் சின்ன சின்ன கரும்புள்ளிகள் காணப்படும். மொத்தத்தில் பார்ப்பதற்கு ரொம்பவே வித்தியாசமாக இருப்பதால், சிலர் அதை விரும்புவதில்லை. இப்படி இருக்கும் இந்த முட்டையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன என்று சொன்னால் கண்டிப்பாக உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

27
காடை முட்டை நன்மைகள்

உங்களுக்கு தெரியுமா? வளரும் குழந்தைகளுக்கு தினமும் காடை முட்டை கொடுப்பது ரொம்வே நல்லது. இதனால் அவர்களது உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதாவது, குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். அவர்களது உடல் நன்கு வலிமையாகும். முக்கியமாக எந்தவொரு தொற்று நோய்களும் அவர்களை எளிதில் தாக்காது. அந்த அளவிற்கு காடை முட்டை குழந்தைகளுக்கு ரொம்பவே நல்லது. இதை குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் கூட சாப்பிடலாம். எனவே இந்த பதிவில் குழந்தைகளுக்கு காடை முட்டை கொடுத்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

37
காடை முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள்:

132 கிராம் பொட்டாசியம், 141 கிராம் சோடியம், 0.4 கிராம் கார்போஹைட்ரேட், 0.4 கிராம் சர்க்கரை சத்து, 13 கிராம் புரதச்சத்து, 10% வைட்டமின் ஏ, 13% வைட்டமின் டி, 26% வைட்டமின் பி12, 6% கால்சியம் மற்றும் 3 % மெக்னீசியம்.

47
காடை முட்டையின் பயன்கள்:

கண் பார்வை திறனை அதிகரிக்கும்:

காடை முட்டையில் வைட்டமின் ஏ அதிகமாகவே உள்ளதால், இது கண் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. சிறுவயதிலிருந்தே உங்கள் குழந்தைக்கு பார்வை குறைபாடு இருந்தால் காடை முட்டை தினமும் அவர்களுக்கு கொடுங்கள். இதனால் உங்களது குழந்தையின் பார்வை திறனும் அதிகரிக்கும்.

ஞாபக சக்தியை அதிகரிக்கும்:

காடை முட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன அவை மூளையின் செயல்பாட்டை தூண்டி நியாபக சக்தியை அதிகரிக்க செய்யும். இது தவிர நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் இது சீராக வைக்க உதவுகிறது. எனவே உங்கள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்க தினமும் அவர்களது உணவில் காடை முட்டை சேர்த்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி, ஞாபகம் மறதி  உள்ளவர்களும் தங்களது உணவில் காடை முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.

57
ரத்த சோகையை குணப்படுத்தும்:

உங்கள் குழந்தையின் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் அதை அதிகரிக்க தினமும் அவர்களுக்கு காடை முட்டை சாப்பிட கொடுங்கள். இதனால் அவர்களது உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி ரத்த சோகையை உள்ளவர்களும், கர்ப்பிணி பெண்களும் இதை சாப்பிடுவதன் மூலம் அவர்களது உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க காடை முட்டை உதவுகிறது.

அலர்ஜியை குணமாக்கும்:

காடை முட்டையில் ஒருவிதமான புரதம் அலர்ஜி பிரச்சனையை குணமாக்கும். எனவே, அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் காடை முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் அலர்ஜி பிரச்சனை விரைவில் குணமாகும்.

இதையும் படிங்க:  நாள்தோறும் குழந்தைகளுக்கு முட்டை கொடுத்தால் 'இத்தனை' நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

67
அல்சர் பிரச்சனையை குணமாக்கும்:

நீங்கள் அல்சர் பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால் தினமும் உங்களது உணவில் காடை முட்டை சேர்த்து வந்தால் அல்சர் பிரச்சனையால் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

சமருமத்திற்கு நல்லது:

நாட்டுக்கோழி முட்டையை விட காடை முட்டையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. அவை உங்களது சருமத்தை பாதுகாக்கும். எனவே நீங்கள் சருமத்தை ஆரோக்கியமான முறையில் பாதுகாக்க விரும்பினால், தினமும் ஒரு காடை முட்டை சாப்பிடுங்கள்.

இதையும் படிங்க:  பச்சை முட்டை குடித்தால் இந்த '1' விஷயம் நடக்குமா?

77
புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும்:

புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும் பண்புகள் காடை முட்டையில் உள்ளன. எனவே புற்றுநோய் வராமல் இருக்க தினமும் ஒரு காடை முட்டை சாப்பிடுங்கள்.

சிறுநீரக கற்கள் பிரச்சனை குணமாகும்:

பித்தக் கற்கள் மற்றும் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் தினமும் காடை முட்டை சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories