பெண்களை இப்படி கிஸ் அடிச்சா சொக்கி போவாங்க.. இதை ட்ரை பண்ணி பாருங்க!

First Published | Jan 9, 2023, 5:16 PM IST

காதலி/ மனைவியுடன் அடிக்கடி கருத்துமோதல்கள் ஏற்பட்டு வருகிறதா? எட்டு வகையான முத்தங்களை பரிமாறி கொள்ளுங்கள்.   

கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட ஒருவருக்கொருவர் அன்பை வெளிப்படுத்தாததே காரணமாக கூறப்படுகிறது. முத்தம் கொடுக்கும்போது அன்பை பரிமாறிகொள்கிறோம். இதனால் அந்த உறவுக்கு ஆயுள் கூடுகிறது. மருத்துவ தகவல்களின் படி முத்தம் கொடுப்பதால் நம் ஆயுளும் அதிகரிப்பதாகவே கூறப்படுகிறது. அண்மையில் செய்த ஒரு ஆய்வில் மனிதன் தன் வாழ்நாளில் 336 மணி நேரத்தை முத்தமிட செலவிடுவதாக தெரியவந்துள்ளது. உங்கள் விருப்பமானவர்களுடன் இருக்கும் பிணைப்பை அதிகரிக்க எந்த முத்தங்களை கொடுக்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம். 

கனிவான கன்ன முத்தம்! 

உங்கள் காதலியோ மனைவியோ அடிக்கடி கோச்சுக்கிட்டு போறவங்களா இருந்தால், கனிவாக அவர்களுக்கு முத்தமிடுங்கள். உங்கள் மூக்கோடு காதலி மூக்கு உரசும்படி, மென்மையாக கன்னத்திலோ, நெற்றியிலோ முத்தமிடுங்கள். இந்த முத்தத்தை எஸ்கிமோ முத்தம் என்பார்கள். 

இதையும் படிங்க; உடல் எடை குறைக்கும் மந்திரம்! பாரத்பே இணை நிறுவனர் சொன்ன ரகசியம்!


ரொமாண்டிக் ஐஸ் கிஸ் 

சூடானவர்களை கூலாக்கும் முத்தம் தான் ஐஸ் கிஸ். குட்டி ஐஸ்கட்டியை வாயில் போட்டபடி, காதலியின் உதட்டருகே சென்று அவரது இடுப்பை லாவகமாக பிடித்து கொள்ளுங்கள். காதலியின் உதட்டில் உங்கள் வாயை வைத்து ஐஸ்கட்டியை அவருக்கு ஊட்டுவது தான் ஐஸ் கிஸ். இதில் நாக்கிற்கு தான் வேலை. 

உதட்டை மாசாஜ் செய்யும் லிக் கிஸ்!  

எப்பேர்பட்ட கோவமாக இருந்தாலும் இந்த முத்தத்தால் அதனை கரைக்க முடியும். காதலியின் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டு, கீழ் உதட்டையும், மேல் உதட்டையும் மென்மையாக நாவால் நீவியபடியே அவருடைய எச்சிலை தீர்த்தமாக மாற்றுங்கள். இதுவே லிக் கிஸ். 

மென்மையான முத்தம்! 

காலை எழுந்ததும், வேலைக்கு செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் என இந்த முத்தத்தை முயற்சி செய்யலாம். இது உதட்டில் மென்மையாக உதட்டை ஒத்தி எடுக்கும் முத்தம். 

kissing partners shutterstock

விளையாட்டு முத்தம்! 

உரையாடல்கள் தான் உறவை பலப்படுத்துகின்றன. உங்களுடைய காதலியோ, மனைவியோ உங்களிடம் அதிக நேரம் செலவிடவே விரும்புவர். அது மாதிரியான நேரங்களில் அவர்களுடன் விளையாட்டாக இந்த முத்தத்தை முயற்சி செய்யலாம். இதில் உதட்டை உதட்டால் உரச வேண்டுமே தவிர முத்தம் அளிக்கக்கூடாது. அதாவது முத்தம் கொடுப்பது போல அருகே போய் உதட்டை ஒத்தி எடுங்கள் போதும். மீண்டும் பேச தொடங்குகள். 

பழங்களோடு ஒரு முத்தம்! 

முன்கூட்டியே சொன்ன ஐஸ் கிஸ் போலவே தான் இந்த முத்தம். ஐஸ் கட்டிக்கு பதில் பழங்களை வாயால் பரிமாறி முத்தமிடுங்கள். காதலி வாய்க்குள் இருக்கும் பழத்தை நாவால் எடுத்தால் விளையாட்டாகவும் இருக்கும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். 

ப்ரெஞ்ச் முத்தம்! 

எல்லா முத்தங்களை விடவும் இந்த முத்தத்திற்கு பலன் அதிகம். காதலியின் உதட்டில் அழுத்தமாக உங்கள் இதழை பதித்து நீண்ட நேரம் கொடுக்கும் முத்தம். இதில் நாக்கும் நாக்கும் போர் தொடுக்கும் அளவுக்கு நெருக்கமாக தொட்டு முத்தமிடுங்கள். 

நெற்றியில் எளிமையான முத்தம்! 

இந்த முத்தம் பொதுவெளிகளிலும் கொடுக்கக் கூடிய முத்தம். உங்களுடைய வாழ்க்கைத் துணையின் நெற்றியில் மிகுந்த அன்போடு முத்தமிடுங்கள். நெற்றி முத்தத்தில் மயங்காத பெண்களே இல்லை. தனித்து இருக்கும் போது ப்ரெஞ்ச் கிஸும், பொதுவெளியில் நெற்றி முத்தமும் இணையின் மனதில் நீங்கா இடம் பெற்று தரும். 

இதையும் படிங்க; கன்னித்தன்மையை இழந்த பெண்களுக்கும் முதலிரவில் ரத்தம் வரும்! இந்த மாத்திரையை பத்தி தெரியுமா?

Latest Videos

click me!