Condoms Facts : ஆணுறைகள்- அறிந்ததும்... அறியாததும்..!!

First Published | Jan 4, 2023, 3:11 PM IST

மனித வரலாற்றில் பல ஆண்டுகளாக நீடித்த கருத்தடை சாதனங்களில் முதன்மையானதாக உள்ளது ஆணுறைகள். அதனுடைய பயன்பாடு குறித்து பலரும் அறிந்திராத 5 சுவாரஸ்ய தகவல்களை விரிவாக பார்க்கலாம்.
 

ஆணுறையை நேரடியாக “ஆணுறை” என்று குறிப்பிடாமல், ரப்பர், ரெயின்கோட் என பல்வேறு பெயர்கள் கொண்டு சொல்லப்படுகிறது. இதை மிகவும் எளிதாக அணியலாம், சாதாரணமான கடைகளில் கூட கிடைக்கும். மலிவான விலை, அதேசமயத்தில் பாலியல் நோய் பரவுவதை தடுப்பதிலும், கருத்தடைக்கும் பெரும் பங்கு வகிக்கிறது. பழங்காலம் தொட்டே கருத்தடைக்காக முக்கியமாக பயன்படுத்தப்படும் பொருட்களில் காண்டம் முதன்மை வகிக்கிறது. ஆனால், ஆணுறைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. அதில் குறிப்பிட்ட சில தகவல்களை இங்கே வழங்கியுள்ளோம். ஒவ்வொன்றாக படித்துப் பாருங்கள்.
 

ஆணுறை அணிந்துகொண்டே செய்யும் வேலை

தொழில்ரீதியான முறையில் பல்வேறு நிறுவனங்கள் ஆபாசப் படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக மேலைநாடுகளில் இதுவொரு தனி திரைத்துறையாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2004-ம் ஆண்டுவாக்கில் ஆபாசப் பட தயாரிப்பில் ஈடுபடும் பலரிடையே ஹெச்.ஐ.வி கிருமித் தொற்று அதிகரிப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆவண தகவல் பதிவுத்துறை நீலப்பட துறையில் பணியாற்றும் அனைவரும் ஆணுறை அணிந்து தான் நடிக்க வேண்டும் என்கிற உத்தரவை பிறப்பித்தது.

Tap to resize

ஆட்டுத்தோல் ஆணுறைகள்

லேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஆட்டுக் குட்டிகளின் தோலில் இருந்து ஆணுறைகள் தயாரிக்கப்படுகின்றன. இதுபோன்ற ஆணுறைகள் கர்ப்பத்தின் ஆபத்தை மட்டுமே குறைக்கும் மற்றும் எச்.ஐ.வி உள்ளிட்ட பாலியல் பரவல் நோய்களை கட்டுப்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது. எச்.ஐ.வி வைரஸ் இந்த ஆணுறைகளின் துளைகள் வழியாக எளிதாக உட்புகுந்துவிடும். அவை குறைந்த பாதுகாப்பை வழங்குவது மட்டுமல்லாமல், ஆட்டுத் தோல் ஆணுறைகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியதாக இருக்கும். 

கி.மு. 3000-ம் ஆண்டு முதல் ஆணுறைகள்

ஆணுறைகளின் பயன்பாடு என்பது கி.மு 3000-ம் ஆண்டிலேயே துவங்கிவிட்டதாக அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் தெரிவித்துள்ளது. ஆணுறை" பற்றிய முதல் அறியப்பட்ட ஆவணம் கிரீட்டின் கிங் மினோஸ் என்பவருடையது என்று அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்கள் தங்களுடைய விந்துக்களில் தேள் மற்றும் பாம்புகள் இருப்பதாக நம்பியுள்ளனர். அதை பெண்ணின் கருப்பைக்குள் புகாமல் இருக்கும் விதமாக ஆட்டின் சிறுநீர்ப்பை வைத்து அவர்கள் ஆணுறை தயாரித்துள்ளனர் என அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் கூறுகிறது.

இந்தியர்களுக்கு காண்டம் சற்று பெரியது தான்

கடந்த 2006-ம் ஆண்டு இந்திய ஆண்களின் பிறப்புறுப்பு குறித்த ஆய்வை இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொண்டது. அதில், இந்திய ஆண்களில் 60% பேரின் ஆண்குறிகள் ஆணுறைகளின் நிலையான நீளத்தை விட பல சென்டிமீட்டர்கள் குறைவாக இருந்தது தெரியவந்தது. நாட்டில் நிலவும் அதிக மக்கள்தொகைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால் அதேசமயத்தில் நாட்டில் பல்வேறு இடங்களில் ஹெச்.ஐ.வி நோய் பரவுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருந்துவிட்டது.
 

மலிவான கருத்தடை சாதனம்

ஆம், கருத்தடை பிரச்னைக்கு பல்வேறு விலையில் நீங்கள் தீர்வை எதிர்நோக்குபவராக இருக்கலாம். ஆனால் அடிப்படையில் ஆணுறைகள் மிகவும் மலிவானது. நீங்கள் நிதிப் பிணைப்பில் உள்ள நபராக இருந்தால், சுகாதார மருத்துவமனையில் இலவசமாக வழங்கப்படும் ஆணுறைகளை பெறலாம். ஆணுறை கிடைக்கவில்லை அல்லது விலை அதிகம் என்று கூறிவிட்டு , உங்களுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடாதீர்கள். 
 

Latest Videos

click me!