உங்களுடைய பாலியல் வாழ்க்கை இன்பமாக இல்லையா..? இந்த 5 பிரச்னைகள் காரணமாக இருக்கலாம்..!!

First Published Dec 29, 2022, 4:36 PM IST

உங்கள் பாலியல் இன்பத்தை பாதிக்க பல காரணிகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அதில் ஒருசில முக்கியமான  காரணங்களை குறித்து பார்க்கலாம்.
 

உங்கள் மகிழ்ச்சியற்ற பாலியல் வாழ்க்கைக்கான சரியான காரணத்தைக் கண்டறிவது மிகவும் சவாலானது. உங்களுடைய பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. உடல்நலக் கோளாறு, மனநல பாதிப்பு, வேலை பளு, மன அழுத்தம், உறவுப் பிரச்னை, பாலியல் முரண்பாடு என்று பல காரணங்களை நிபுணர்கள் சுட்டிக்காட்டுக்கின்றனர். அதில் குறிப்பிட்ட சில பிரச்னைகளை குறித்தும், அதுதொடர்பான விளக்கங்களை விரிவாக பார்க்கலாம்.

விறைப்புத்தன்மை

பெரும்பாலான ஆண்களுக்கு இருக்கக்கூடிய பொதுவான பிரச்னையாக உள்ளது விறைப்புத்தன்மை குறைபாடு. இதுதொடர்பான பிரச்னையே நமக்கு உடலுறவில் இருக்கும் போது தான் தெரியவரும். உடனடியாக ஒரு மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்றால் விரைவிலேயே பிரச்னை நீங்கிவிடும். இதற்கு சிறப்பு சிகிச்சை என்று எதுவும் தேவையில்லை. பெரும்பாலானோர் மன அழுத்தப் பிரச்னையால் விறைப்புச் செயலிழப்பு ஏற்படுகிறது. உங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொண்டால், விரைவாகவே பிரச்னை நீங்கும்.

பாலுறவில் குறையும் ஆர்வம்

பாலுறவில் ஆர்வம் குறைந்து காணப்படுவது அடுத்த பிரச்னையாக உள்ளது. பாலியல் ஆசை குறைவதால், அவர்களுடைய உடல் இயக்கத்திறனிலும் மாற்றம் ஏற்படுகிறது. இதையடுத்து அவர்கள் உடலுறவில் ஈடுபடுவதை முற்றிலுமாக நிறுத்திவிடுகின்றனர். பாலுறவு செயல்பாட்டின் போது அதிக வலி, பாலுறவு நேரம் தொடர்பான பலவீனம், விந்துமுந்துதல் போன்ற பிரச்னை பாலுறவில் ஆர்வம் குறைவதற்கு முக்கிய காரணமாக உள்ளன. இதனால் தம்பதிகள் பாலுறவில் ஈடுபடுவதை தவிர்த்துவிடுகின்றனர்.

விந்துமுந்துதல்

ஆண்களுக்கு விந்துமுந்துதல் பிரச்னை இருந்தால், அது அவர்களுடைய பாலியல் வாழ்க்கை மற்றும் துணை அல்லது மனைவியுடனான உறவை கூட சீர்குலைத்துவிடும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களுடைய துணையை திருப்திப்படுத்த முடியாமல் ஏமாற்றம் அடையும் போது, அது மனநலனிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம். உடலுறவின் போது பல ஆண்களால் முன்கூட்டியே எழும் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடிவதில்லை. அதனால் விந்துமுந்துதல் பிரச்னை ஏற்படுகிறது. புள்ளிவிவரங்களின் படி மூன்று ஆண்களில் ஒருவர் இந்த பிரச்னையை சந்திக்கின்றார்.
 

உணர்ச்சி இழப்பு

பாலியல் செயல்பாட்டை முழுமையாக அனுபவிக்க காதலும் நெருக்கமும் அவசியம். தம்பதிகள் பலரும் உடலுறவுக்கு முன்னதாக, அதுசார்ந்த உணர்வை அனுபவிக்க ஆர்வமாக உள்ளனர். ஆனால் எல்லா நேரங்களிலும் அது சிறப்பாக அமைந்துவிடுவது கிடையாது. அதற்கு காரணம் துணையுடனான இணக்கம் ஏற்படாததே முதன்மையான காரணமாக உள்ளது. படுக்கையில் பாலியல் செயல்திறனை மேம்படுத்த சில தொடுதல் மற்றும் தூண்டுதலில் ஈடுபடவேண்டும் என  மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பாலியல் நோய்கள்

பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் முக்கிய பொது சுகாதார பிரச்சனைகளில் ஒன்றாகும். இதனால் மகிழ்ச்சியான செக்ஸ் வாழ்க்கை கிடைப்பது பெரும் பிரச்னையாகிவிடும். பாலியல் ரீதியாக . 35க்கும் மேற்பட்ட பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணி நோய்த்தொற்றுகள் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, விறைப்புத்தன்மை, விந்துமுந்துதல் மற்றும் கடினமான உடலுறவு போன்ற பிற பிரச்னைகளும் இருக்கலாம். இந்தப் பிரச்னை வரும்போது, உங்கள் துணையிடம் பேசி... பிரச்னையைத் தீர்த்துக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரை அணுகவும்.

click me!