Extra marital affairs: உங்கள் கணவருக்கு இன்னொரு பெண் மீது விருப்பமா? இதுதான் காரணம்!

First Published | Dec 29, 2022, 4:31 PM IST

இந்தியா போன்ற பாரம்பரியங்களை பின்பற்றும் நாடுகளில் திருமண பந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கலாச்சாராத்தின் தொடர்ச்சியாகவே திருமணம் பார்க்கப்படுகிறது. ஆனால் திருமணம் செய்வதால் காதல் வயப்படுவது நின்றுவிடுகிறா? என்றால் இல்லை என்பது தான் பதில். 

ஒருவர் மீது காதல் வயப்பட பல காரணங்கள் இருக்கலாம். திருமணத்தை தாண்டி உறவு கொள்ளும் ஆண்களிடம், ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் எனக் கேட்டால் சரியான காரணங்களை கூறமாட்டார்கள். சிலர் மனைவியின் மீது பழியை போட்டு தப்பித்து கொள்வர். மனைவி சரியாக அமைந்தால் இன்னொருவர் மீது ஈர்ப்பு வராதா? அப்போதும் வாய்ப்பு இருக்கிறதுதான். நம்முடன் உறவை பகிர்ந்து கொள்ளும் நபருக்கு நேர்மையாக இருக்க நினைக்காததன் வெளிப்பாடே கள்ளக்காதல் போன்ற உறவுகளுக்கு காரணமாக அமைகிறது. இது மாதிரியான திருமணத்தை மீறிய உறவுகளுக்கான சில காரணங்களை இங்கு காணலாம். 

புதிய நட்பு 

மனைவியை தவிர இன்னொருவருடன் நெருக்கமான நட்பை பேண நினைத்தல் மற்றொரு உறவுக்கு வழி வகுக்கிறது. தன்னுடைய மனைவிக்கு எல்லா ரகசியங்களும் தெரிந்த பிறகு உறவில் ஏற்படும் சலிப்பு இதற்கு காரணமாக இருக்கலாம். எல்லா விஷயங்களையும் மனைவியிடமே பகிர்ந்து கொண்டாலும், தனக்கு நட்பு என்ற பந்தம் வேண்டும் என நினைப்பதால் இந்த உறவு தொடங்கலாம். 

மனைவியின் அறியாமை 

தங்களின் மனைவி குடும்ப விஷயங்களை போதுமான அளவில் கவனித்து கொள்ளவில்லை. தன் மனைவி பொறுப்பாக இல்லை, சிறுபிள்ளைத்தனமாக இருப்பதாக நினைக்கும் சிலர் மற்ற பெண்களை நாடுகிறார்கள். 


திரில் வேணும் பாஸ்! 

பல ஆண்கள் தங்களுடைய வாழ்வில் விடாப்பிடியான தேடலையும், அதனால் கிடைக்கும் விஷயங்களையும் கொண்டாடுவர். ஆனால் பழக பழக பாலும் புளிக்கும் என்பது போல அந்த விஷயங்கள் கிடைத்த பின்னர் சலித்துவிடுவார்கள். மீண்டும் புதிய விஷயங்களை நோக்கி பயணிப்பர். அதை அவர்கள் திருமண வாழ்விலும் செய்வதால் தான் மற்றொரு பெண்ணை நாடுகின்றனர். 

இதையும் படிங்க; Happy new year wishes 2023: பிரியமானவர்களுக்கு பிரியங்கள்... இதோ உங்களுக்கான புத்தாண்டு வாழ்த்து குறிப்புகள்!

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்கிறது. தங்களுடைய திருமண பந்தத்தில் எதிர்மறையான விஷயங்களை அதிகம் காணும் ஆண்கள் அதிலிருந்து விடுபட்டு கொள்ள விரும்புகின்றனர். அந்த சூழலை சமாளித்து பாசிட்டிவாக மாற்றாமல் பெரும்பாலான ஆண்கள் வேறொரு பெண்ணை தேடி செல்லுகின்றனர். 

உதவாத உறவு 

எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும்போது திருமண உறவு விரக்தியை ஏற்படுத்துகிறது. ஆண்கள் தாங்கள் எதிர்பார்க்கும் அன்பு, மரியாதை, கவனிப்பு ஆகியவற்றை தான் பெறவில்லை என உணரும்போது மற்றொரு பெண் மீது கவனம் செலுத்துகிறார்கள். தங்கள் இணையரிடம் கிடைக்காத விஷயங்களை அந்த பெண்ணிடம் பெறலாம் என நம்புகிறார்கள். மன அழுத்தத்தில் இருக்கும் கணவரை புரிந்து கொண்டு உதவாதபோது உறவில் விரிசல் ஏற்படுகிறது. அடிப்படை புரிதல் கூட இல்லாத போது ஏற்படும் அதிக மன அழுத்தம் அந்த உறவை விட்டு வெளியேற ஆண்களை உந்துகிறது. 

மனைவியின் கொடுமை 

மனைவி தவறான வார்த்தைகளால் கணவரை தொடர்ந்து துன்புறுத்தும்போது அந்த உறவில் தொய்வு ஏற்படுகிறது. சிலர் தங்கள் கணவரின் உழைப்பையும், அவர் குடும்பத்திற்காக செய்யும் தியாகங்களையும் பாராட்டுவதில்லை. தொடர்ந்து அவமதிக்கப்படுவதாக உணரும் கணவர்கள் வேறொரு துணையை நாடுகிறார்கள். 

திருப்தியில்லாத உடலுறவு 

கணவன் மனைவிக்குள் ஏற்படும் திருப்தியான உடலுறவுதான் இருவர் இணைந்திருப்பதற்கான ஆதாரம் என பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். உடலுறவில் மனைவிகள் நாட்டம் காட்டாவிட்டால் தங்களுக்குள் இருக்கும் நெருக்கமானது குறைந்துவிட்டதாக ஆண்கள் நினைத்து கொள்கிறார்கள். ஆகவே மற்றொரு உறவை நாடி செல்கிறார்கள். 

ஆணோ, பெண்ணோ தங்களுடைய இணையின் விருப்பு, வெறுப்புகளை தெரிந்து வைத்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொண்டால்தான் உறவு பலப்படும். இல்லையென்றால் மூன்றாம் நபர் என்ட்ரி வந்துவிடும். பி கேர்புள்! 

Latest Videos

click me!