உங்க வாழ்க்கைத் துணையோட உடலுறவு வெச்சிக்க முடியலயா? அப்படினா இந்த விஷயம் உங்களுக்கு ரொம்ப முக்கியம்!

First Published | Jan 4, 2023, 4:43 PM IST

திருமண வாழ்க்கையில் உடலுறவு கொள்வது முக்கியமான அங்கம். அன்பும், அக்கறையும் கொண்ட நமது இணையருடன் நாம் நெருக்கமாக இருக்க காதலும், காமமும் தேவைப்படுகிறது

காதலை அள்ளி கொடுத்த பிறகு இன்னும் நெருங்க காமம் உதவும். ஆனால் எல்லா உறவிலும் சில நேரங்களில் விரக்தி ஏற்படும். பொறுப்புகள், ஓய்வில்லா வேலை, இடைவிடாத பிரச்சனை திருமண வாழ்க்கையில் துரத்திக் கொண்டே இருக்கும். உடலுறவிற்கு மனமும், உடலும் ஒத்துழைக்காது. அதுமாதிரி சமயங்களில் நம்மை நாமே புத்துணர்வாக்கினால் தான் நம்முடன் வாழ்பவரை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள முடியும். உடலுறவில் சலிப்பு ஏற்பட்டாலும் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பது குறித்து இங்கு காணலாம். 

நம்முடைய உடலில் உள்ள ஹேப்பி ஹார்மோன்களில் எண்டோர்பினும் ஒன்று. இதுதான் நமது உடலும் மனமும் அழுத்தத்தில் சிரமப்படும்போது நிவாரணி போல செயல்படும். நாம் உடற்பயிற்சி செய்யும் போது இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அதனால் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். உங்கள் வாழ்க்கைத் துணையோடு இணைந்து உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் இருவரும் அணுக்கமாக முடியும். எண்டோர்பினும் அதிகமாக சுரக்கும். இதனால் உடலுறவில் நன்கு இயங்கமுடியும். உங்களுடைய இணையரோடு உடலுறவு வைத்து கொள்ளும் சமயங்களில் கூட இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும். இதனால் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள். நீக்குகிறது. 

Tap to resize

வெறும் உடலுறவு மட்டுமில்லாமல் சின்ன தொடுகைகள் தொடங்கி அன்பான வார்த்தைகள் வரை எல்லாமே கணவன், மனைவிக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும். நீங்கள் பாலியல்ரீதியான சுகங்களை அதிகமாக அனுபவிக்க முடியாமல் அழுத்தத்தில் காணப்பட்டீர்கள் எனில் உங்கள் பார்ட்னரின் கைகளை அடிக்கடி பிடித்து கொள்ளுங்கள். அவ்வப்போது உங்கள் மனைவியை அணைத்து கொள்ளுங்கள். அவர் எதிர்பாராத சமயங்களில் முத்தமிடுங்கள். பரபரப்பான உங்களுடைய நாளில் ஒரு லவ் யூ கொஞ்சம் முத்தம் கொடுத்தால் அந்த நாள் ரொமாண்டிக்காக மாறிவிடும். நமக்கு நேசமானவர்களின் அருகாமை தான் எல்லா பிரச்சனைகளில் இருந்து நம்மை விடுவிக்கும். 

உடலுறவில் நாட்டம் இல்லாமல் போனதற்கான காரணத்தை கண்டறியுங்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதற்கான ஆரம்ப புள்ளியை கண்டறிவது தான் பிரச்சனையை சரி செய்வதற்கான வழி. உங்களுடைய பார்ட்னர் பாலியல் விரக்தியால் அவதிப்பட்டு கொண்டிருந்தால் அவருக்கு உதவுங்கள். அவர் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள். உடலுறவில் நாட்டம் இல்லாமல் போனதற்கு யார் காரணம் என்பதை சிந்திக்க வேண்டும். அதற்கான உளவியல் காரணங்களையும் கண்டறிந்து தீர்வு காண வேண்டும். மனைவி அதிகமான வீட்டு வேலை செய்துவிட்டு களைப்பாக தூங்குவது காரணம் என்றால், இரவில் வேலைகளை முடிக்க அவருக்கு உதவுங்கள். நல்ல உடலுறவு இல்லாததும் விரக்திக்கு காரணமாக இருக்கலாம். இருவரும் பேசி உறவை மேம்படுத்துங்கள். 

பாலியல் ரீதியான விரக்தி பொதுவானதுதான். வாழ்க்கைத் துணையோடு அனுபவிக்க முடியாத சமயங்களில் தனியாக செக்ஸ் வைத்து கொள்ளுங்கள். அதாவது பாலியல்ரீதியான மனச்சோர்வை நீக்க சந்தையில் விற்கும் செக்ஸ் பொம்மைகளை உபயோகிக்கலாம். உடலுறவுக்கான உடனடி ஆசை இல்லாமல் இருக்க இந்த முறை உதவும். இதனால் பின்னாளில் உங்கள் வாழ்க்கை துணையோடு விரக்தி இல்லாமல் உல்லாசமாக இருக்கலாம். சிலர் பாலியல் விரக்தி ஏற்படும்போது பார்ட்னரை துன்புறுத்த தொடங்குகிறார்கள். அவர்கள் இந்த முறையை பின்பற்றலாம். 

பாலியல் விரக்திக்கான சில தீர்வுகள்! 

சில மருந்துகளை எடுத்துக் கொள்வதால் உடலுறவில் விரக்தி ஏற்படுகிறது. நாம் எடுத்து கொள்ளும் மருந்துகளில் உள்ள சில வேதிப்பொருள்கள் இயலாமையை உண்டாக்கலாம். சிலர் உடலுறவில் உச்சம் கொள்ளவும் மருந்துகளை எடுத்து கொள்கிறார்கள். இதன் பக்கவிளைவாக கூட விரக்தி இருக்கலாம். உடனடியாக மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள். 

உங்களுக்கு பாலியல் விரக்தி ஏற்பட்டால் வாழ்க்கைத் துணையோடு அது குறித்து பேசி பிரச்சனையை தீர்க்கலாம். உங்களை அவர் நிச்சயம் புரிந்து கொள்வார் எனில் பகிர்ந்துகொள்ளுங்கள். இல்லையென்றால் உங்களை நீங்களே பார்த்து கொள்வதுதான் சரி. வீண் வாக்குவாதம் இன்னொரு பிரச்சனையை தொடங்கிவிடலாம். மேற்சொன்ன உடற்பயிற்சி, பார்ட்னருடன் உரையாடல் உள்ளிட்ட சில விஷயங்களை செய்வதன் மூலம் இயற்கையான முறையில் பாலியல் விரக்தியை கடக்க முடியும். 

இதையும் படிங்க; உடம்பெல்லாம் வலியோட சத்தே இல்லாம இருக்கீங்களா? உளுந்து கஞ்சி செஞ்சு சாப்பிடுங்க!

Latest Videos

click me!