இந்த 'எழுத்துக்களில்' உங்க மனைவி பெயர் ஆரம்பிக்குதா? இந்த பெண்களின் கணவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்..

First Published | Feb 23, 2023, 2:36 PM IST

Name Astrology: இந்த பெயரை கொண்ட பெண்களின் கணவர்கள் எடுத்த காரியம் வெற்றிதான். 

பெயர், ஒரு நபரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. பெயரின் முதல் எழுத்து நபரின் ராசி, குணநலன்களுடம் பொருந்தும். பெயருக்கும், கிரகங்களுக்கும் இடையே கூட ஆழமான தொடர்பு உள்ளது. ஒருவரின் பெயரின் அடிப்படையில் கூட அதிர்ஷ்டத்தை தீர்மானிக்க முடியும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துக்களை முதல் எழுத்தாக வைத்திருக்கும் பெண்களை மணந்து கொள்ளும் ஆண்களுக்கு அதிர்ஷ்டம் வருகிறது. அவரது வாழ்க்கை வெற்றி நிறைந்ததாக இருக்கும். அந்த 'எழுத்துக்களை' இங்கு காணலாம். 

R - என்ற எழுத்து 

'R' என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்ட பெண்கள் தெளிவான இதயம் கொண்டவர்கள். அவர்கள் தங்கள் மனதில் எதையும் வைக்கமாட்டார்கள். மனதில் தோன்றுவதை உடனே சொல்கிறார்கள். கடின உழைப்பால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். மோசமான சூழ்நிலையிலும் கூட பொறுமையை இழக்க மாட்டார்கள். நல்ல ஆலோசகர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள்.

இவரது ஜாதகத்தில் சுப கிரகங்களின் எண்ணிக்கை நன்றாக இருந்தும், ராஜயோகம் உருவாகி இருந்தால், அத்தகைய பெண்கள் தங்கள் கணவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். அவள் கணவன் நிறைய சம்பாதிக்கிறான். தன் வாழ்க்கைத் துணையின் இன்ப துன்பங்களில் தோளோடு தோள் சேர்ந்து நடக்கிறாள். அவளுடைய குணங்கள் மற்றும் இயல்பு காரணமாக, அவள் கணவனின் சிறப்பு அன்பைப் பெறுகிறாள். இந்த பெண்களின் கணவர்கள் வாழ்க்கையில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள், எல்லா வகையான மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்கள். 

Tap to resize

A - என்ற எழுத்து 

 'A' என்ற எழுத்தில் பெயர் கொண்ட பெண்கள், வரவிருக்கும் ஆபத்துக்களை சரியான நேரத்தில் அறிவார்கள். அவர் தனது கணவருக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை அளிப்பார்கள். நல்ல சமூக அறிவை உடையவர்கள். ஆகவே நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை மிக விரைவாக அறிவார்கள். தந்திரங்களை இவர்களால் கண்டறிய முடியும். கணவனின் முக்கிய முடிவுகளில் உடனிருப்பார்கள். அவளுடைய புரிதலை அனைவரும் பாராட்டுவார்கள். இந்த பெண்கள் தோல்விகளுக்கு பயப்படுவதில்லை. இவர்கள் கணவனின் வெற்றிக்கு உதவியாக இருப்பார்கள். இவர்களின் அறிவுரையை கணவர்களும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். ஆணவம் இல்லாமல் இணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம். 

D - என்ற எழுத்து 

 'D' என்ற எழுத்தில் தொடங்கும் பெயருடைய பெண்கள், தங்களின் இலக்குகள் குறித்து மிகவும் விழிப்புணர்வு கொண்டிருப்பார்கள். நினைத்ததை முடிப்பார்கள். தங்கள் இலக்கை அடைய அனைத்து முயற்சிகளையும் செய்கிறார்கள். கணவரின் முன்னேற்றத்தில் சிறப்பான பங்கு வகிப்பார்கள். திருமணத்திற்குப் பிறகு அவர்களின் அதிர்ஷ்டத்தில் ஒரு சிறப்பு மாற்றம் உள்ளது. 

திருமணத்திற்குப் பின் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். அவர்களின் தலைமைத்துவ குணம் முக்கியமானது. தனது கணவரை மிகவும் ஆதரிக்கின்றனர். அவர்களின் நடத்தை மிகவும் எளிமையானது, அவர்கள் யாருடைய இதயத்திலும் விரைவாக தங்கள் இடத்தைப் பெறுகிறார்கள். இவர்கள் நிறைய கனவுகள் கொண்டவர்கள். அதை நிறைவேற்ற முடிந்தவரை முயற்சி செய்கிறார்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகம். இதனால் அவரது கணவருக்கும் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க: மாங்கல்ய பலம் அருளும் காரடையான் நோன்பு.. எப்போது? எப்படி விரதம் இருந்தால் அம்மன் அருளை முழுமையாக பெறலாம்..

P - என்ற எழுத்து 

'P' என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் பெண்கள் எளிமையாக வாழ விரும்புகிறார்கள். பிறர் முன்னிலையில் காட்டிக் கொள்வதிலோ, சிறந்து விளங்குவதிலோ இவர்களுக்கு விருப்பமில்லை. பந்தாவாக தோன்றுவது இவர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இல்லை. கணவரின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றுகிறார். கணவனின் செல்வத்தை பெருக செய்வாள். பணத்தின் சரியான பயன்பாடு இவர்களுக்குத் தெரியும். பணம் சம்பாதிப்பது, அதை நிர்வகிப்பது எப்படி என்று அவர்களுக்குத் தெரியும். 

V -என்ற எழுத்து 

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் பெண்கள், தங்கள் கணவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இவர்களின் திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் சிறப்பான வெற்றி கிடைக்கும். இந்த பெண்கள் அனைவரையும் வழிநடத்தும் திறன் கொண்டவர்கள். அவர்களின் திறமையால் கணவனின் இதயத்தை கவர்வார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நன்றாக பழகுவார்கள். இவர்களால் முடியாத காரியம் இல்லை. எந்த ஒரு செயலையும் மனப்பூர்வமாகவும் அர்ப்பணிப்புடனும் செய்து அதன் மூலம் வெற்றியைத் தேடிக் கொள்வார்கள். 

மேலே குறிப்பிட்டுள்ள எழுத்துக்களில் உங்களுக்கு துணை அமைந்திருந்தால் நீங்க அதிர்ஷ்டகாரர்கள். 

இதையும் படிங்க: மாசி சங்கடஹர சதுர்த்தி.. இந்த நேரத்தில் புது தாலிக்கயிறு மாற்றினால் தீர்க்க சுமங்கலி வரம்.. விலகும் ஓடும் சனி!

Latest Videos

click me!