பெண்களிடம் ஆண்கள் ‘வழிவதற்கான’ முதல் 5 காரணங்கள் இதுதான்..!!

First Published | Feb 23, 2023, 10:02 AM IST

திருமணமாகி இருந்தாலும் சரி, தனியாளாக இருந்தாலும் சரி பெண்கள் என்றாலே ஆண்களுக்கு ஒருவித ஈர்ப்பு இருக்கத்தான் செய்யும். இது பெண்களுக்கும் பொருந்தும் என்றாலும், ஆண்களுடன் ஒப்பிடும் போது சற்று குறைவு தான். அந்த வகையில் ஆண்கள் பெண்களால் ஈர்க்கப்படுவதற்கான 5 காரணங்களை தெரிந்துகொள்வோம்.
 

ஒன்று தான். எதிர்பாலினத்தால் ஈர்க்கப்படுவது என்பது அறிவியல் ரீதியானது. இதை தடுக்க முடியாது. இதற்கு திருமணமானவர்கள் அல்லது ஆகாதவர்கள் அல்லது தனியாக இருப்பவர்கள் அல்லது துணை பிரிந்து வாழ்பவர்கள் என யாரும் விதிவிலக்கு கிடையாது. எனினும் திருமணமானவர்கள் அல்லது துணையை கொண்டவர் எதிர்பாலினத்திடம் சாதாரணமாக பேசுவது கூட குற்றமாக கருதப்படுகிறது. இந்த விஷயத்தில் பெண்களை விடவும் ஆண்கள் தான் அதிகம் ஈடுபடுபவராக உள்ளார்கள். தனது மனைவி அல்லது காதலியை விட்டுவிட்டு மற்ற பெண்களுடன் ஆண்கள் நெருக்கம் காட்டுவது நம்பிக்கை துரோகம் என்று 
சொல்லும் அளவுக்கு விவகாரம் பெரிதாகிவிடுகிறது. இந்நிலையில் பெண்களிடம் ஆண்கள் ஃப்ளர்ட் செய்வது போல பேசுவதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உடலுறவுத் தேவை

மற்ற பெண்களால் ஈர்க்கப்பட்டு ஆண்கள் பழகுவதற்கான முக்கிய காரணம் உடலுறவு தான். அது அவர்களுக்கு இடையில் நடக்கிறதா? இல்லையா? என்பது வேறு விஷயம். ஆனால் பெண்களிடம் நெருக்கம் காட்டும் ஆண்களிடம் இருக்கும் முக்கிய காரணம் உடலுறவுத் தேவை தான். திருமணத்தை மீறிய உறவுகளை நாடுபவர்கள் இரண்டாம் ரகத்தினர். ஆனால் மற்ற  பெண்களிடம் தன்னை எப்போதும் ஹீரோவாக வெளிப்படுத்திக் கொள்ள துடிக்கும் பெரும்பாலான ஆண்கள் முதல் தேவை காமமாகவே உள்ளது. 
 


கதைகள் பேசுவதற்கு

ஆண்களுக்கு நண்பர்கள் வட்டம் அதிகமிருந்தாலும், பெண் தோழிகள் அளவுக்கு தங்களுக்குள் சொந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். அதேசமயத்தில் குடும்பத்தை தாண்டி, தனது சொந்த விஷயங்களை வெளிநபரிடம் பகிர வேண்டும் என்கிற எண்ணமும் மேலோங்கி இருக்கும். அப்படியொரு சமயத்தில் பெண் தோழிகள் அமைந்தால், ஆண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை கொட்டித் தீர்த்துவிடுவார்கள். இதனால் அந்த ஆண் பெண் நட்புக்குள் ஒருவித இணக்கம் ஏற்படும். இதை காதல், காமம் என்று கூறிவிட முடியாது. “உனக்கு நான் இருக்கிறேன்” என்கிற வகையில் மட்டுமே இந்த உறவை பார்க்க முடியும். தனது சொந்த பிரச்னைகளை பேச, அழுது புலம்ப, மனம்விட்டு பேசி சிரிக்க போன்ற தேவைகளுக்கு பல ஆண்கள், தங்களுக்கு என்று ஒரு பெண் தோழியை வைத்துக்கொள்கின்றனர்.
 

உணர்வுகளை தடுக்க முடியாது

திருமணமாகிவிட்டது, காதலி இருக்கிறாள் என்பதற்காக ஒரு எதிர்பாலினத்தைச் சேர்ந்தவரை பிடித்துவிட்டால், அதை மாற்றிக்கொள்ள முடியாது. அவர் சார்ந்த நமக்குள் இருக்கும் உணர்வுகளை தடுக்கவும் முடியாது. ஆனால் கட்டுப்பாடாக இருக்கலாம். ஒருவேளை அவருடன் தான் சேர்ந்து பணி செய்ய வேண்டும், கல்லூரியில் படிக்க வேண்டும், விளையாட வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? எனவே ஒருவரை நமக்கு பிடிக்கும் போது, இயல்பாகவே அவர் மீதான நெருக்கம் உருவாகிவிடுகிறது. அதை நாம் கனிவாக பேசுவதி, இனிமையாக நடந்துகொள்வது, அவருக்கு மட்டும் சிறப்பு கவனத்தை ஒதுக்குவது போன்ற செயல்களை வெளிப்படுத்தும். இதை பக்கத்தில் இருப்பவர்கள் கவனித்தால், அதை ஒருவித ‘ஜொள்ளு’ என்பார்கள். 

தனிப்பட்ட தேவைக்காக

ஒருவருடைய நட்பை பெற்று, அதன்மூலம் தனக்கு தேவையான விஷயங்களை வாங்கிக்கொள்ளும் பழக்கம் பலரிடையே உள்ளது. அதற்காக கூட ஆண்கள் பெண்களிடம் வழிவது உண்டு. உங்கள் மீது அன்பு காட்டி, அதன்மூலம் உங்களை மயங்கி தனது சுய ஆதாயத்தை ஆடையவும் வேண்டி சில பெண்களிடம் ஆண்கள் நெருக்கம் காட்டுவார்கள். அந்த தேவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எளிதாக அன்புக்கு மயங்கிவிடும் பெண்கள், பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து அழுது புலம்புவார்கள். 

பெண்கள் உடலுறவை தவிர்ப்பதற்கான 5 காரணங்கள்..!!

பிரபலம் அடைய வேண்டி

பெண்கள் நிறைய பேரை தனது வலையில் வீழ்த்துபவன் தான் ஆண் என்கிற ஒரு பொய்யான கற்பனை பலரிடையே நிலவுகிறது. இது என்றுமே ஏற்கத்தக்கது கிடையாது. அப்படிப்பட்ட ஆண்கள் மேல் ஒன்று முதல் இரண்டு நாட்கள் வரை வேண்டுமானால் பெண்களுக்கு ஈர்ப்பு இருக்கலாம். அதை தொடர்ந்து ஒருவித செயற்கைத்தனம் தெரியும். குறிப்பாக இதுபோன்ற செயல்பாடுகளில் திருமாகாவதர்களை விடவும் திருமணமான ஆண்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். இதன்மூலம் தங்களுடைய நட்பு வட்டத்துக்குள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மத்தியில் பெரும் பிரபலம் கிடைப்பதாக அவர்கள் நம்புகின்றனர். இந்த விஷயத்தில் வழிந்து பேசி நிறைய பெண்களிடம் ஏமாந்த ஆண்களும் நிறைய பேர் உண்டு.
 

Latest Videos

click me!