திருமண வாழ்க்கை ஜெகஜோதியாக இருக்க 5 வழிமுறைகளை ஃபாலோ பண்ணுங்க..!!

First Published | Feb 23, 2023, 10:18 AM IST

திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த பின்னரும் உங்களுடைய பாலியல் வாழ்க்கை ஜெகஜோதியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், குறிப்பிட்ட சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த மாற்றம், உங்களுடைய திருமண வாழ்க்கையையும் சிறப்பானதாக மாற்றும்.
 

sexuaiity

சிலருக்கு திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கை சலித்துவிட்டதாக தோன்றும். குறிப்பாக பலரும் பாலுறவு செயல்பாட்டில் இதை உணர்கின்றனர். ஒருவரை திருமணம் செய்துகொண்ட பின், அவருடன் மட்டுமே உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்நாளும் இருக்க போகிறது. அப்போது உடலுறவில் சலிப்பு ஏற்பட்டால், வாழும் வாழ்க்கையின் மீது ஆர்வமற்று போய்விடும். எனவே திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க, அவ்வப்போது சில மசாலாக்கள் தேவைப்படுகிறது. ஒரு உறவைப் பேணுவதில் உடல் நெருக்கம் மிகவும் முக்கியமானது என்பதால், தம்பதிகள் தங்கள் பாலியல் வாழ்க்கையை எப்போதும் ஜெகஜோதியாக வைத்திருக்க வேண்டும். திருமணமான அனைத்து தம்பதிகளும் தங்கள் பாலியல் வாழ்க்கையில் கண்டிப்பாக செய்ய வேண்டிய சில மாற்றங்கள் குறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

உடலுறவுக்கான நேர நிர்ணயம்

உங்களுக்கும் உங்கள் துணைக்கும் உடலுறவு கொள்ள நேரமில்லை என்று தோன்றினால், நீங்கள் உடலுறவுக்கு என்று தனியாக ஒரு நேரத்தை நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும். இது ஆரம்பத்தில் விசித்திரமாக இருப்பது போல உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அது உங்களையும் உங்கள் துணையின் பாலியல் வாழ்க்கையையும் நல்ல பாதையில் கொண்டு செல்ல வழிவகுக்கும்.  நீங்கள் உடலுறவுக்கு என்று நேரம் ஒதுக்கும்போது, ​​மற்ற விஷயங்கள் உங்களைத் தொந்தரவு செய்யாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
 

Tap to resize

உடலுறவுக்குப் பின் ஓடக்கூடாது

எப்போதும் உடலுறவை நோக்கி அவசரப்பட வேண்டாம். உங்களது பார்டனர் உடலுறவில் ஆர்வம் காட்டவில்லை என்றால், தொந்தரவு செய்வதைத் தவிர்க்கவும். அவர்களைத் திரும்பத் திரும்பக் கேட்பதற்குப் பதிலாக, தாங்களாகவே உடலுறவில் ஆர்வம் காட்டும் வரை பொறுத்திருங்கள். உங்கள் பார்டனர் சில சமயங்களில் உடலுறவுக்கு தயாராக இல்லாமல் இருக்கலாம். நீங்கள் வற்புறுத்தினால் அது சண்டைக்கு வழிவகுக்கும்.
 

எல்லாமும் சேர்ந்தது தான் காமம்

செக்ஸ் என்றால் ஊடுருவல் மட்டுமே இறுதி இலக்காக இருக்கக்கூடாது. தொடுதல், முன்விளையாட்டு, முத்தம், கட்டிப்பிடி போன்ற செயல்பாடுகளும் காமத்தை அடிப்படையாகக் கொண்டது தான். உங்கள் செக்ஸ் செயல்பாட்டில் முன்விளையாட்டை சேர்ப்பது ஊடுருவலை மிகவும் எளிதாக்குவதற்கான சிறந்த வழியாகும். ஏனெனில் இது உடலுறவை வலியற்றதாகவும் மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது.

அன்பிற்குரியவரை தவிர மற்றவர்கள் நம் உதட்டையே பார்த்தால் என்ன அர்த்தம் தெரியுமா..??

டேட் நைட் செல்லுங்கள்

தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கையில் ஜோதியை உயிர்ப்புடன் வைத்திருக்க, அவ்வப்போது டேட் நைட் போவது மிகவும் முக்கியம். இது ஒரு காதல், வேடிக்கையான மற்றும் தன்னிச்சையான தேதி இரவாக இருக்கும்போது, ​​தம்பதிகள் ஒருவருக்கொருவர் நெருக்கத்தை உணர முடியும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கும், விழிப்புணர்வைத் தூண்டுவதற்கும்

பொறுப்புடன் இருங்கள்

சில சமயங்களில், உங்கள் பார்டனர் உடலுறவைத் தொடங்கவில்லை என்றால், உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அதற்காக நீங்கள் எதையும் செய்யாமல் இருக்க வேண்டாம், உடலுறவை துவங்கும் போது, அது வெற்றியடையாது என்று நினைக்காதீர்கள். நீங்கள் மெதுவாக முன்னேறினால் எல்லாம் சரியாகிவிடும். அதனால் உங்களுடைய திருமண வாழ்க்கையும், உங்களது கட்டுப்பாட்டின் கீழ் வரும். 
 

Latest Videos

click me!