Kitchen Secret : பிரியாணி அல்லது கிரேவி செய்யும் போது வெங்காயம் சரியாக சிவந்து வர ரொம்ப நேரம் பிடிக்கும். ஆனால் வெங்காயத்தை வதக்கும் போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்ப்பதால் சமையலின் சுவை மற்றும் நிறம் இரண்டையுமே அற்புதமாக மாற்றலாம்!
சமையலின் சுவையும் நிறமும் இரண்டும் மாறும் வெங்காயத்தை வதக்குவது சமையலின் ஒரு முக்கிய கட்டமாகும். ஆனால் இதற்கு ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்ப்பதால் சமையலின் சுவையையும் நிறத்தையும் அதிகரிக்கலாம். அது எப்படி? இதன் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான காரணங்கள் என்ன? இதோ தகவல்கள்.
விரைவாக பழுப்பு நிறத்திற்கு வரும் வெங்காயத்திலேயே இயற்கையாகவே சர்க்கரைச் சத்து இருக்கும். நாம் வெளியில் இருந்து ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்கும்போது, அது வெங்காயத்துடன் விரைவாகக் கரைந்து சமையலுக்குத் தேவையான அழகான பொன்னிற பழுப்பு நிறத்தை (Golden Brown) உடனடியாகத் தருகிறது.
நேரம் மிச்சமாகும் பொதுவாக வெங்காயத்தைக் குறைந்த தீயில் பழுப்பு நிறமாக்க (Caramelize) 20 முதல் 30 நிமிடங்கள் ஆகும். ஆனால் சர்க்கரை சேர்ப்பதால் இந்தச் செயல்முறை வேகமாக நடந்து, சமையல் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
அற்புதமான சுவையும் வாசனையும் சர்க்கரை வெங்காயத்தின் நெடியைக் குறைக்கிறது. இது கரைந்து வெங்காயத்துடன் சேரும்போது கிரேவி அல்லது பிரியாணிக்கு ஒரு விதமான மென்மையான கார-இனிப்பு கலந்த அற்புதமான சுவையைத் தருகிறது.
வெங்காயம் கருகிப்போவதைத் தடுத்து நிறுத்துகிறது சர்க்கரை வெங்காயத்தின் உள்ளிருக்கும் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனால் வெங்காயம் காய்ந்து கருகிப் போவதற்குப் பதிலாக, மென்மையாகப் பழுப்பு நிறமாக மாறும்.
சர்க்கரை சேர்க்கும் சரியான நேரம் வெங்காயத்தை எண்ணெயில் போட்டு அது சற்று வதங்கி மெதுவானதும் (Translucent) சர்க்கரையைச் சேர்க்க வேண்டும். இந்த கட்டத்தில் சர்க்கரை சேர்த்தால் மட்டுமே அது வெங்காயத்துடன் சரியாகக் கலந்து வேலை செய்யும்.
சர்க்கரையை வெறும் ஒரு சிட்டிகை (Pinch) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிகமாகச் சேர்த்தால் உங்கள் பிரியாணி அல்லது சாம்பார் இனிப்பாக மாறிவிடும். இது சமையலின் அசல் சுதையைக் கெடுத்துவிடும்.
எந்த வகையான சமையலுக்கு இது ஏற்றது? பிரியாணி, குருமா, மசாலா கிரேவி அல்லது மட்டன்/சிக்கன் கறி செய்யும் போது இந்த சர்க்கரை முறையைப் பயன்படுத்தலாம். இது உங்கள் சமையலை ஹோட்டல் சுவையை விட இன்னும் சிறப்பாக மாற்றும்.