ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டாலே பலரது வீடுகளிலும் சிக்கன், மட்டன் வாசனைதான் தூக்கும். "சைவத்துல என்னப்பா இருக்கு? வெறும் சாம்பார், ரசம்தானே!" என்று சொல்பவர்களின் வாயடைக்க வைக்கும் 5 அட்டகாசமான அசைவ பிரியர்களே அசைந்து போகும் சைவ உணவுகள் இதோ!
நன்கு முதிர்ச்சியடையாத பலாப்பழ பிஞ்சை (Raw Jackfruit) சிறிய துண்டுகளாக வெட்டி, மட்டன் மசாலா சேர்த்து வறுவலோ அல்லது குழம்போ செய்து பாருங்கள். இதை வேக வைத்து சாப்பிடும்போது, அதன் நார் போன்ற பகுதி (Fibrous texture) அச்சு அசலாக மட்டன் துண்டுகளை மெல்லுவது போன்ற உணர்வைத் தரும். வட இந்தியாவில் இதற்கு 'வெஜிடேரியன் மட்டன்' என்றே ஒரு பெயர் உண்டு!
25
சுடச்சுட 'சோயா சங்க்ஸ் கீமா' :
மீல் மேக்கரை சுடுதண்ணீரில் போட்டு பிழிந்து, மிக்ஸியில் லேசாக கொரகொரப்பாக அரைத்து (Mince), மட்டன் கீமா செய்முறையில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள். சப்பாத்தி, பரோட்டா அல்லது தோசைக்கு இதை தொட்டுச் சாப்பிட்டால், சிக்கன் கொத்துக்கறியை சாப்பிடுவது போலவே இருக்கும். சிக்கனை விட இதில் புரதச்சத்து (Protein) மிக அதிகம் என்பது கூடுதல் போனஸ்!
35
காளான் 'பெப்பர் ஃப்ரை':
பட்டன் காளான்களை நறுக்கி, தண்ணீர் சேர்க்காமல், இடித்த மிளகுத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நல்லெண்ணெயில் சுருள சுருள வதக்க வேண்டும். காளானில் இயற்கையாகவே இருக்கும் 'உமாமி' (Umami) சுவை, அசைவ உணவுகளுக்கு இணையான ஒரு அலாதி ருசியைத் தரும். சாப்பிடுவதற்கு அப்படியே மட்டன் லிவர் ஃப்ரை அல்லது சிக்கன் சுக்கா போலவே இருக்கும்.
வாழைப்பூவின் உள்பகுதியை சுத்தம் செய்து, மீன் வறுவலுக்கு அரைப்பது போல மசாலா, லேசான எலுமிச்சை சாறு மற்றும் சோளமாவு தடவி எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரித்து எடுங்கள். வாழைப்பூவின் இதழ்கள் எண்ணெயில் பொரிபடும்போது, அதன் வடிவமும் சரி, மொறுமொறுப்பும் சரி, அப்படியே வஞ்சிர மீன் வறுவலை நினைவுபடுத்தும்.
55
தந்தூரி சிக்கனுக்கு குட்பை:
கெட்டித் தயிரில் கஸ்தூரி மேதி, காஷ்மீரி மிளகாய்த்தூள், கரம் மசாலா கலந்து, பெரிய பன்னீர் துண்டுகளை ஊறவைத்து தோசைக் கல்லில் நெய் ஊற்றி லேசாக கருகும் படி சுட்டெடுங்கள்.கிரில் செய்த சிக்கன் டிக்காவை விட சாஃப்ட்டாகவும், ஜூஸியாகவும் இருக்கும். வாயில் வைத்த உடனே கரையும் இந்த சுவைக்கு முன்னாடி எந்த சிக்கனும் ஈடாகாது!