காலையில் திடீரென பவர் கட்டால் மிக்ஸி கிரைண்டர் ஓடாமல் மாவும் தீர்ந்துவிட்டால் கவலை வேண்டாம். கரண்ட் இல்லாத போதும் வெறும் 10 நிமிடத்தில் மிக்ஸி துணையின்றி எளிதாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய 5 அருமையான அவசர கால காலை உணவு ஐடியாக்கள் இதோ உங்களுக்காக!
டோஸ்டர் வேலை செய்யலனா என்ன, தவா இருக்கே! ஒரு முட்டையை உடைத்து ஊற்றி (சைவ பிரியர்கள் கடலை மாவு கரைசல் பயன்படுத்தலாம்) அதில் உப்பு, மிளகுத்தூள், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து அடித்துக் கொள்ளவும். பிரெட்டை அதில் நனைத்து, தோசைக் கல்லில் நெய் அல்லது வெண்ணெய் ஊற்றி இருபுறமும் சிவக்க எடுத்தால் சூப்பர் பிரெட் டோஸ்ட் ரெடி.
ரவா உப்மா கூட சில சமயம் கட்டியாகிவிடும், ஆனால் சேமியா அப்படி ஆகாது. கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, வெங்காயம், தக்காளி, வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு காய்கறி (கேரட் அல்லது பீன்ஸ்) வதக்கி, தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சேமியாவை கொட்டி இறக்கினால் கமகம கிச்சடி தயார்.
55
'ஸ்மார்ட் சமையல்' டிப்ஸ்:
கரென்ட் இல்லாத போது சட்னி அரைக்க முடியாது. அதனால் தக்காளி தொக்கு அல்லது பூண்டு தொக்கு எப்போதும் பிரிட்ஜில் ஸ்டாக் வையுங்கள். இட்லிப் பொடி, பருப்புப் பொடி போன்ற 'பொடி' வகைகள் அவசர காலத்திற்கு ஆபத்பாந்தவன்! மிக்ஸி இல்லையென்றாலும் பரவாயில்லை, மத்தைக் கொண்டு தக்காளி, வெங்காயத்தை லேசாக மசித்துக் கூட சமைக்கலாம்.