சிக்கன், மட்டன், மீன் சாப்பிட சீசன் தேவையில்லை என்றாலும், தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப அவற்றை உண்பது அவசியம். எந்தக் காலத்தில் எந்த அசைவ உணவு உடலுக்குக் குளுமை அல்லது ஆற்றல் தரும் என்பதை அறிந்து சாப்பிட்டால் உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்கலாம்.
கோடையில் சிக்கன் சாப்பிடுவதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். ஏன்னா, சிக்கன் உடம்பில் வெப்பத்தை (Body heat) அதிகமாக்கும். அதற்குப் பதில் கடல் மீன்கள் அல்லது ஆற்று மீன்களைச் சாப்பிடலாம். மீனில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வெயில் காலத்தில் உங்கள் சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கும்!
26
கோடையில் மட்டன் சாப்பிடலாமா?
வெயில் கொளுத்தும் போது மட்டன் பிரியாணியை ஒரு பிடி பிடிக்கலாமா? தாராளமாகச் சாப்பிடலாம், ஆனால் ஒரு கண்டிஷன்! மட்டன் சாப்பிடும் நாட்களில் மோர், இளநீர் அல்லது வெள்ளரிக்காய் போன்ற உடலைக் குளிர்ச்சியாக்கும் உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அஜீரணக் கோளாறு வரலாம்.
36
மழைக்காலம் - மீன் சாப்பிடும்போது உஷார்;
மழைக்காலம் தான் மீன்களின் இனப்பெருக்கக் காலம். இந்த நேரத்தில் கடலில் அலைகள் அதிகமாக இருப்பதால், மீன்கள் ஃப்ரெஷ்ஷாகக் கிடைக்காது. ஐஸ் பாக்கெட்டுகளில் வைத்த மீன்களைச் சாப்பிட்டால் அலர்ஜி அல்லது வயிறு உபாதைகள் வரலாம். அதனால் மழைக்காலத்தில் கடல் மீன்களுக்குப் பதில் நாட்டுக்கோழி பெஸ்ட் சாய்ஸ்!
குளிர்காலத்தில் நம் உடலின் மெட்டபாலிசம் மெதுவாக இருக்கும். இந்த நேரத்தில் உடலுக்குப் போதிய வெப்பமும், நோய் எதிர்ப்புச் சக்தியும் தேவை. மிளகு தூக்கலாகப் போட்ட மட்டன் நெஞ்சு எலும்பு சூப் அல்லது மட்டன் குழம்பு சாப்பிட்டால், குளிர் நடுக்கமும் ஓடும்; சளி, இருமலும் எட்டிப் பார்க்காது!
56
எப்போதுமே 'டாப்' டக்கர் - நாட்டுக்கோழி:
பிராய்லர் கோழியை விட எந்த சீசனுக்கும் பக்கவிளைவுகள் தராத ஒரே அசைவம் நாட்டுக்கோழி தான். வெயில் காலமோ, மழைக்காலமோ.. வாரத்தில் ஒருநாள் நாட்டுக்கோழி சூப் அல்லது குழம்பு சாப்பிடுவது உடலுக்கு அசாத்திய பலத்தைத் தரும்.
66
சீசன் இல்லாத 'ஆல்-டைம்' சீக்ரெட் டிப்:
எந்த சீசனில் அசைவம் சாப்பிட்டாலும் சரி, சமைக்கும் போது இஞ்சி-பூண்டு பேஸ்ட், சீரகம், மிளகு ஆகியவற்றை தாராளமாகச் சேருங்கள். இது அசைவ உணவை எளிதில் செரிக்க வைப்பதோடு, சீசன் மாற்றங்களால் வரும் வாயுத் தொல்லை, அஜீரணத்தை அடியோடு விரட்டும்.