Egg Cholesterol : முட்டை ஆரோக்கியமான உணவுதான்னு நிபுணர்கள் சொல்றாங்க. ஆரோக்கியமா இருக்கிற பெரும்பாலானவங்க, இதய நோய் அபாயம் இல்லாம தங்களோட டயட்ல முட்டையை சேர்த்துக்கலாம்.
ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானது?
முட்டை ஒரு ஆரோக்கியமான உணவுதான் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆரோக்கியமான நபர்கள் தங்கள் சீரான உணவில் முட்டையைச் சேர்த்துக்கொள்வதால் இதய நோய் அபாயம் அதிகரிக்காது. முட்டையின் தரம், அதன் மஞ்சள் கருவில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை வைத்துதான் பெரும்பாலும் மதிப்பிடப்படுகிறது.
ஒரு பெரிய முட்டையில் சுமார் 200 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது
ஒரு பெரிய முட்டையில் சுமார் 200 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இது அதிகமாகத் தோன்றலாம். ஆனால், உணவில் உள்ள கொலஸ்ட்ராலை விட, சாச்சுரேட்டட் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள்தான் ரத்த கொலஸ்ட்ரால் அளவை அதிகம் பாதிக்கிறது என நவீன ஆய்வுகள் கூறுகின்றன.
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது
தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது. ஆனால், மக்கள் முட்டையை டோஸ்ட், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சாசேஜ், பேக்கன், பொரித்த உருளைக்கிழங்கு போன்றவற்றுடன் சாப்பிடுகிறார்கள். உண்மையில், இந்த சைடு டிஷ்கள்தான் இதய ஆரோக்கியத்திற்குப் பிரச்சினை, முட்டை அல்ல.
காலை உணவில் முட்டையை வேகவைத்தோ, ஆம்லெட்டாகவோ சாப்பிடலாம்
காலை உணவில் முட்டையை வேகவைத்தோ, காய்கறிகள் சேர்த்த ஆம்லெட்டாகவோ சாப்பிடுவது சிறந்தது. உங்கள் இதய ஆரோக்கியம் ஒரே ஒரு உணவைப் பொறுத்தது அல்ல. வார, மாத அடிப்படையில் நீங்கள் சாப்பிடும் ஒட்டுமொத்த உணவைப் பொறுத்தது. காய்கறிகள், பழங்கள், பருப்புகள், நட்ஸ், தானியங்கள் நிறைந்த உணவைப் பழக்கப்படுத்துங்கள்.
தினமும் ஒன்று முதல் இரண்டு முட்டைகள் வரை சாப்பிடுவது பாதுகாப்பானது
ஆரோக்கியமான பெரியவர்கள் தினமும் ஒன்று முதல் இரண்டு முட்டைகள் வரை (மஞ்சள் கருவுடன்) சாப்பிடுவது பாதுகாப்பானதும், ஊட்டச்சத்து மிக்கதும் ஆகும். சாதாரண கொலஸ்ட்ரால் அளவு உள்ளவர்களுக்கு, இந்த அளவில் முட்டை சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்காது என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
முட்டை மஞ்சள் கருவில் 'கோலின்' என்ற முக்கிய ஊட்டச்சத்து உள்ளது
முட்டை மஞ்சள் கருவில் 'கோலின்' என்ற முக்கிய ஊட்டச்சத்து உள்ளது. இது மூளை வளர்ச்சி, கல்லீரல் ஆரோக்கியம், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு அவசியம். மேலும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. இவை நினைவாற்றலை மேம்படுத்தி, உடல் வீக்கத்தைக் குறைக்கின்றன.
முட்டையில் கலோரிகள் குறைவு (ஒரு பெரிய முட்டையில் சுமார் 74 கலோரிகள்). ஆனால், உயர்தர புரோட்டீன் அதிகம். இதனால், முட்டை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இது அடிக்கடி பசி எடுப்பைக் குறைத்து, உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.