கேரளா ஸ்டைல் மாம்பழ புளிசேரி பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?

கேரளாவின் புகழ்பெற்ற உணவுகளில் புளிசேரியும் ஒன்று. மாம்பழத்தை பயன்படுத்தி செய்யும் இந்த உணவு திருமணம் போன்ற முக்கிய விழாக்கள், விசேஷங்களின் போது விருந்தில் முக்கியமான உணவாக இடம்பெறும்.

kerala style mango pulisseri recipe
கேரள புளிசேரி :

மாம்பழ புளிசேரி என்பது கேரளாவின் பாரம்பரிய உணவுகளில் முக்கியமான ஒன்று. இது இனிப்பு, புளிப்பு, காரம் ஆகியவற்றின் அருமையான கலவையாக இருக்கும். சாதத்துடன் சேர்த்து சாப்பிட இது மிகவும் அருமையாக இருக்கும். இது ஒவ்வொரு ஓணம் திருவிழாக்களிலும் (சாத்யா) ஒரு முக்கியமான பகுதியாக இருக்கும். அனைத்து சுவைகளும் கலந்த இது மிகவும் ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது. 
 

kerala style mango pulisseri recipe
மாம்பழ புளிசேரியின் சிறப்புகள்:

- தயிர் மற்றும் மாம்பழத்தின் இனிப்பு புளிப்பு சேர்க்கை, செரிமானத்திற்கு உதவும்.
- மசாலா மற்றும் தேங்காய் விழுது உடல் சூட்டை சமநிலைப்படுத்த உதவும்.
- இது சாதாரண சாதத்துடன் நன்றாக பொருந்தும்.
- இது வேக வைக்கும் நேரத்தில் தயாரிக்கக்கூடிய எளிமையான உணவு.


தேவையான பொருட்கள்:

ஃபிரஷ் மாம்பழம் – 1 (நறுக்கியது)
தயிர் – 1 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

அரைப்பதற்கான பொருட்கள்:

தேங்காய் துருவல் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1 டீஸ்பூன்
சிறிதளவு கடுகு (சுவைக்காக)

மேலும் படிக்க:புதுச்சேரியின் பிரபலமான பிரெட் குலாப் ஜாமூன்: வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி?
 

தாளிக்க:

கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
சீரகம் – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன் (விரும்பினால் சேர்க்கலாம்)

செய்முறை:

- முதலில் மாம்பழ துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, மஞ்சள்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக வெந்து வரும் வரை வேகவிடவும்.
- மாம்பழம் நன்றாக மென்மையாக வெந்தவுடன், அரைத்த தேங்காய், மிளகாய், சீரக விழுதை சேர்க்கவும்.
- இதை சில நிமிடங்கள் நன்றாக கலக்கி, கொதிக்க விடவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, பதத்தை சரிசெய்யலாம்.
- பிறகு தயிரை சேர்த்து, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மெதுவாக கிளறவும். தயிரை சேர்த்த பிறகு அதிக சூடாக்க வேண்டாம். இல்லையெனில் தயிர் திரிந்து போக வாய்ப்பு இருக்கும்.
- தனியாக ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
- இந்த தாளித்ததை புளிசேரியில் சேர்த்து நன்றாக கலந்து 2-3 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்துப் பரிமாறலாம்.

சர்விங் குறிப்பு:

- வெறுமனே சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
- சிறிது நெய் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
- மாம்பழ புளிசேரியை அவியல், உருளைக்கிழங்கு மேஷ் போன்ற பொரியல்களுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
- தக்காளி ரசம் அல்லது குழம்பு இருக்கும் போது இதை சிறப்பு சைட் டிஷ் உணவாக பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க:பஞ்சாபி ஸ்டைல் சோலே மசாலா...அட்டகாசமான சுவையில் செய்யலாம்
 

ஆரோக்கிய பலன்கள் :

- மாம்பழம் பீட்டா கரோட்டின் நிறைந்தது, இது உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும்.
- தயிர் ஆன்டிபயாட்டிக் தன்மை கொண்டது, ஜீரண சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- தேங்காய் ஆரோக்கியமான கொழுப்பை வழங்கி உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது.

இந்த முறையில் வீட்டிலேயே பாரம்பரிய மாம்பழ புளிசேரியை சுவையாகவும், சத்தானதாகவும் தயாரிக்கலாம்!

Latest Videos

vuukle one pixel image
click me!