இதயம் நல்லா இருக்க இந்த 5 உணவுகளை மிஸ் பண்ணாம சாப்பிடுங்க.!!

First Published | Apr 10, 2023, 7:00 AM IST

இந்த 5 காய்கறிகளுடன் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அவை என்னென்னெ என்பதை பார்க்கலாம்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பலர் இதய நோயால் பாதிக்கப்படுகின்றனர். பலர் மாரடைப்பால் இறந்து வருகின்றனர். ஆனால் சில வகையான காய்கறிகள் இதயத்தை வலுவாக வைத்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். தற்போது இதய நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே இதய நோய்க்கு முக்கிய காரணம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இதயம் வலுவாக இருக்க, நல்ல வாழ்க்கை முறை பழக்கங்களை கடைப்பிடித்தால் மட்டும் போதாது. ஆரோக்கியமான உணவுகளையும் சாப்பிட வேண்டும். நிபுணர்களின் கூற்றுப்படி,சில காய்கறிகள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Tap to resize

கீரையில் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் நிறைந்துள்ளன. இவற்றில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன. பசலைக்கீரையிலும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள கீரை இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

இதையும் படிங்க: வைட்டமின் C-க்கு இவ்ளோ நன்மைகள் இருக்கா! அதுவும் கோடையில் உடல் சூட்டை விரட்டி, நோய் எதிர்ப்பு சக்தி தரும்!

முட்டைக்கோஸ் மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்றாகும். முட்டைக்கோஸில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம் மற்றும் கந்தகம் உள்ளது. அவை உடலில் உள்ள மொத்த கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகின்றன. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ப்ரோக்கோலியில் மெக்னீசியம், பொட்டாசியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதயம் ஆரோக்கியமாக இருக்க இவை அவசியம். உங்கள் உணவில் ப்ரோக்கோலியை சேர்த்துக்கொள்வது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்கும்.

தக்காளி நம் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மையை கொடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் கே ரத்தத்தை சுத்திகரிப்பதுடன் இதய ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது. எனவே தக்காளியை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பீட் ரூட் நம் ஆரோக்கியத்திற்கு செய்யக்கூடியது அவ்வளவு இல்லை. பீட்ரூட் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி. தொடர்ந்து பீட்ரூட் சாறு உட்கொள்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இதையும் படிங்க: சீரகம் நல்லதுனு நினைச்சுருப்பீங்க.. ஆனா ரொம்ப சேர்த்துகிட்டா இந்த பக்க விளைவுகள் வருமாம்...!

Latest Videos

click me!