உணவே மருந்து என்னும் நமது பாரம்பரிய சமையல் மாறிக்கொண்டே வருகிறது. நாம் அன்றாடம் எந்தவொரு உணவிலும் வாசனைக்காகவே சில பொருட்களை சேர்ப்போம். அவை வெறும் வாசனைக்கு மட்டும் என்றில்லாமல், மருத்துவ குணத்தையும் கொண்டிருக்கும்.
நம் வீட்டு சமையலறையில் தவறாமல் இடம்பெற்றிருக்கும் சோம்பு என்று அழைக்கப்படும் பெருஞ்சீரகம் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். பெருஞ்சீரக விதைகள் செரிமானத்தை அதிகரிக்கும் பண்புகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றது.
மேலும் இரைப்பை பிரச்னை, மாதவிடாய்க்கோளாறு, செரிமானக் கோளாறுகள், வயிற்றில் உள்ள ஒட்டுண்ணி பிரச்சனை, பெருங்குடல் கோளாறுகள் உள்ளிட்ட இன்னும் பலவற்றுக்கு பெருஞ்சீரக டீ நன்மை தரும்.
சில நேரங்களில் ஏற்படும் விக்கல் தண்ணீர் குடித்தாலும் நிக்காது, அதற்கு பெருஞ்சீரகத்தை மோரில் கலந்து குடித்தால் விக்கல் நின்று விடும். உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
பெருஞ்சீரகம் தினமும் உண்பதால் ரத்தம் சுத்திகரிப்பதோடு மட்டுமல்லாமல், ரசாயன கழிவுகளையும் உடலில் இருந்து வெளியே அகற்றுகிறது.ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிறிதளவு பெருஞ்சீரகங்களை நன்கு மென்று சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பலம் பெரும்.