வெந்தயம் பல ஆண்டுகளாக உடல்நலப் பிரச்சினைகளைப் போக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெந்தய விதைகளில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, இரும்புச்சத்து, நார்ச்சத்து, பயோட்டின், மக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வெந்தயம் ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகவும் உள்ளது. இப்போது வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக அறிந்து கொள்வோம்.
முடி வளரும்!
வெந்தயத்தின் முக்கியமான நன்மைகளில் இதுவும் ஒன்று. வெந்தயத்திற்கு முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறன் உள்ளது. வெந்தயம் நம் தலையில் உள்ள மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கும். ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் வெந்தயத்தில் நிறைந்துள்ளன. வெந்தயம் பயன்படுத்தினால் முடி உதிர்தல், பொடுகு, நரை முடியை அறவே நிறுத்துகிறது. வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து பேஸ்ட் செய்து, காலையில் குளிக்கும் முன்பு வெந்தய ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தலாம். உடல் குளுமையாகி முடி வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.
சர்க்கரை நோய் கட்டுப்பாடு!
வெந்தயத்தில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து குடலில் கெட்டியான ஜெல்லை உருவாக்குகிறது. இது சர்க்கரைகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை ஜீரணிக்க உதவும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, நீரிழிவு நோயாளிகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெந்தயத்தில் 4-ஹைட்ராக்ஸிசோலுசின் என்ற அமினோ அமிலமும் உள்ளது. இது கணையத்தில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எடை குறையும்!
வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும் வெந்தயம் பயனுள்ளதாக இருக்கும். இவை அனைத்தும் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும். வெந்தயம் குறிப்பாக வயிற்று கொழுப்பை எரிக்க உதவுகிறது. வெந்தயத்தில் நார்ச்சத்து உள்ளது. இது பசியைக் குறைக்கவும், வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கவும் உதவுகிறது. அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் கலவைகளையும் கொண்டிருக்கின்றன. அவை அதிகப்படியான உணவைக் குறைக்கின்றன. தினமும் வெந்தய நீர் அருந்தலாம் அல்லது வெந்தயத்தை சாப்பிடலாம்.
பருக்கள் குறையும்!
வெந்தயத்தின் மற்றொரு நன்மை முகப்பருவை விரைவில் குறைக்கும். இது நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் இயற்கை எண்ணெய்கள் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. ஈரப்பதத்தை வைத்திருக்கிறது. வெந்தயத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது.
இதையும் படிங்க: வெயிலுக்கு தயிர் ரொம்ப சாப்பிடுறீங்களா! இந்த 5 தவறுகளை மட்டும் பண்ணாதீங்க! மத்தபடி ரொம்ப நல்லது!
செரிமானம் மேம்படும்!!
வெந்தயம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. நம்முடைய வயிற்றுக் கோளாறுகளை முற்றிலும் தடுக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது. வெந்தயம் இரைப்பை, குடல் அழற்சியை நீக்குகிறது. இது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது.