ஸ்வீட் மேல பளபளக்குற அந்த வெள்ளித் தாள் உடலுக்கு நல்லதா? அதை சாப்பிடலாமா?

Published : Sep 03, 2026, 10:00 AM IST

Silver Varak on Sweets : ஸ்வீட் மேல பளபளன்னு ஒட்டி வர்ற சில்வர் வொர்க், உண்மையிலேயே சுத்தமான 'ஃபூட் கிரேடு' வெள்ளியா இருந்தா மட்டும்தான் சாப்பிடலாம். இல்லையென்றால் அது உடலுக்கு ஆபத்தாக அமையும்.

PREV
15
வெள்ளித் தாளின் விளைவு என்ன?

பண்டிகை, கல்யாணம்னு ஸ்வீட் கடைக்குப் போனா, அங்க காஜு கத்லி, பர்பி மேல பளபளன்னு ஒண்ணு ஒட்டிருப்பாங்களே, அதுதான் 'சில்வர் வொர்க்'. இந்த வெள்ளித் தாளை எப்படி தயாரிக்கிறாங்க, இதனால உடம்புக்கு என்ன ஆகும்னு பலருக்கும் தெரியாது. அதைப் பத்தின முழு விவரம் இதோ.

Jalebi History: உங்க ஃபேவரைட் ஜிலேபி நம்ம ஊர் ஸ்வீட் இல்லையா? 1000 வருஷ கதை இது!

25
வெள்ளி முலாம் பூசுதல் என்றால் என்ன?

இது சாப்பிடக்கூடிய, ரொம்பவே மெல்லிசான ஒரு வெள்ளித் தகடு. ஒரு மைக்ரோமீட்டரை விட குறைவான தடிமன்தான் இருக்கும். இதுக்கு சுவையோ, வாசனையோ கிடையாது. ஸ்வீட்ஸை பார்க்க அழகா, கவர்ச்சியா காட்டுறதுதான் இதோட ஒரே வேலை. முகலாயர்கள் காலத்துல இருந்து இந்த பழக்கம் இந்தியாவுல இருக்கு. அப்போ, அரச குடும்பத்தோட விருந்தோம்பலையும், ஆடம்பரத்தையும் காட்ட தங்கம், வெள்ளித் தகடுகளை ஸ்வீட்ஸ்ல பயன்படுத்தினாங்க. காலப்போக்குல, வெள்ளி மங்களகரமான சின்னமா மாறிடுச்சு.

Chocolate: ஸ்வீட் நியூஸ்.! சாக்லேட் சாப்பிட்டா இவ்ளோ நல்லதா?! இவ்ளோ நாள் தெரியாம போச்சே.!

35
எப்படி தயாரிக்கப்படுகிறது?

பழைய காலத்துல, வெள்ளியை ரொம்ப மெல்லிய தாள் ஆக்க, விலங்குகளோட (பெரும்பாலும் காளை அல்லது ஆடு) குடல் அல்லது தோல் நடுவுல வெச்சு சுத்தியலால தட்டுவாங்க. இதனால, பல சைவர்கள் இதை சாப்பிடத் தயங்குனாங்க. ஆனா இப்போ காலம் மாறிடுச்சு. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தோட (FSSAI) விதிகளின்படி, சில்வர் வொர்க் தயாரிப்புல எந்த விலங்குப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. இப்போ நவீன மெஷின்கள் மூலமா, முழுசா சைவ முறையிலதான் இதைத் தயாரிக்கிறாங்க.

Spoiled Milk Sweets : வெறும் '2' நிமிடங்களில் திரிஞ்சு போன பாலில் 'ஸ்வீட்' செய்யலாம்! ஈஸியான ரெசிபி

45
இது ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானதா?

நீங்க சாப்பிடுற சில்வர் வொர்க் 99.9% சுத்தமான 'ஃபூட் கிரேடு' வெள்ளியா இருந்தா, அதை கொஞ்சமா சாப்பிடுறதுல தப்பு இல்ல. அது நம்ம உடம்புல ஜீரணம் ஆகாது, எந்தப் பிரச்சினையும் இல்லாம உடலை விட்டு வெளியேறிடும். ஆனா லாபத்துக்காக, சில தயாரிப்பாளர்கள் வெள்ளிக்கு பதிலா அலுமினியம் ஃபாயில் அல்லது கலப்பட உலோகங்களைப் பயன்படுத்துறாங்க. இதை சாப்பிட்டா உடம்புக்கு ரொம்பவே ஆபத்து.

ஸ்வீட் சாப்பிட்டதும் தண்ணீர் மட்டும் குடிக்காதீங்க!! மோசமான பிரச்சனைக்கு வாய்ப்பு

55
உண்மையான வெள்ளி தாளை எப்படிக் கண்டறிவது?

உண்மையான வெள்ளித் தாளை கையால தொட்டாலே போதும், அது சுலபமா கிழிஞ்சு கையில ஒட்டிக்கும். அதுவே அலுமினியம் ஃபாயிலா இருந்தா, அது கொஞ்சம் கெட்டியா இருக்கும். விரலால தேய்ச்சா ஒரு சின்ன உருண்டை மாதிரி ஆகிடும்.

National sweet of India: இந்தியாவின் தேசிய ஸ்வீட் எது தெரியுமா?

Read more Photos on
click me!

Recommended Stories