செய்முறை விளக்கம்:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சேமியாவை வேக வைத்து ஒரு சல்லடையில் ஊற்றி, வடிகட்டி விடுங்கள். சேமியா குழையாது உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.
மிக்ஸரில் சேர்க்கும் ஓமப்பொடி செய்யும்போது ஓமம் சேர்க்கத் தேவை இல்லை. நீங்கள் விருப்பப்பட்டால் சிறிதளவு ஓமத்தை மிக்ஸியில் அரைத்து சிறிது நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை ஓமப்பொடி மாவுடன் கலந்து பிசையவும்.