murungai tea
நம்முடைய உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையும் பொழுது, உடல் சோர்வு, மந்தமான நிலை மற்றும் பல்வேறு உடல் உபாதைகள் நமக்கு ஏற்படுகிறது. இதில் இருந்து மீண்டு வருவதற்கு, நாம் அடிக்கடி இந்த ஒரு சூப்பை எடுத்துக் கொண்டாலே போதும், அது என்ன சூப் என்பதை பற்றி நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 5
உப்பு- தேவையான அளவு
தண்ணீர் – 2 டம்ளர்
கருவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை விளக்கம்:
முதலில் கைப்பிடி அளவுக்கு முருங்கைக் கீரை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு முன்பு முருங்கை இலையில் உள்ள காம்புகளை நன்றாக ஆய்ந்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதோடு ஆய்ந்து வைத்துள்ள முருங்கை இலைகளை அவற்றோடு சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு, அடுப்பை அணைத்து அதை தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது நமக்கு தேவையான முருங்கைக் கீரை சூப் தயார். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு கரண்டியில் முருங்கை இலை சூப்பை எடுத்து பரிமாறலாம்.
கொஞ்சம் சூடாகவே இதை அருந்துவது உடலுக்கு நல்லது. இதை வாரம் இருமுறை குடித்து வாருங்கள், உங்களுடைய ரத்த அணுக்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும்.