Ellu Sadam: புரட்டாசியில் பெருமாளுக்குப் பிடித்த எள்ளு சாதம்..இப்படி சூப்பரா செய்து நெய்வேத்தியம் வையுங்கள்..

First Published Sep 23, 2022, 10:19 AM IST

Ellu sadam Recipe: பெருமாளுக்கு நெய்வேத்தியமாக வைக்கப் போகும் எள்ளு சாதம் சுவையாக எப்படி செய்வது என்று தான் நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

புரட்டாசி மாதம் துவங்கிவிட்டாலே, அசைவ உணவுகளை தவிர்த்து, சைவ உணவுகளை உண்பது வழக்கம். அதிலும், குறிப்பாக  பெருமாளுக்கு தளிகை போடுவதற்கு பச்சரிசி சாதம், எள் சாதம், புளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் போன்றவை சமைப்பது விசேஷம் கொண்டவை. அதில் ஒன்றாக பெருமாளுக்கு நெய்வேத்தியமாக வைக்கப் போகும் எள்ளு சாதம் சுவையாக எப்படி செய்வது என்றுதான் தெரிந்து கொல்லப் போகின்றோம்.

மேலும் படிக்க ...Sivappu arisi aval: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சிவப்பரிசி அவல்..வெறும் 5 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி..?

தேவையான பொருட்கள்:

எள்ளு – 3 டீஸ்புன் 

கடலைப்பருப்பு – 2 டீஸ்புன் 

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்புன் 

வர மிளகாய் – 5 லிருந்து 6

தேங்காய் துருவல் – 2 டீஸ்புன் 

முதலில் எள்ளு சாதம் செய்வதற்கு இந்த பொருட்களை எல்லாம் போட்டுபொன்னிறமாக வறுக்க வேண்டும். இதனை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு, எள்ளு சாதத்திற்கு தேவையான 1 கப் பச்சரிசி சாதத்தையும் உதிரி உதிரியாக வடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.  

இப்பொழுது நாம் எள்ளு சாதம் தயார் செய்ய போகிறோம்..?

தேவையான பொருட்கள்:

 நெய் – 1 டீஸ்புன் 

எண்ணெய் – 1 டீஸ்புன்  

கடலைப்பருப்பு – 1டீஸ்புன் 

உளுந்தம் பருப்பு – 1 டீஸ்புன் 

கடுகு – 1 டீஸ்புன் 

வேர்கடலை – 1  டீஸ்புன் 

முந்திரி பருப்பு – 10

பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்புன் 

வர மிளகாய் – 1

கருவேப்பிலை – 1 கொத்து

செய்முறை விளக்கம்:

அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய்  ஊற்றி  இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து மணக்க மணக்க வறுத்து கொள்ளுங்கள்.

 பிறகு உதிரி உதிரியாக வடித்திருக்கும் சாதத்தை கடாயில் தாளிப்பில் போட்டு தேவையான அளவு உப்பு தூவி சாதத்தை ஒரு முறை கலந்து விட்டு, இந்த சாதத்துக்கு தேவையான அளவு பொடித்து வைத்திருக்கும் எள்ளு பொடியை சாதத்தில் தூவி நன்றாக கலந்து விட வேண்டும். 

மேலும் படிக்க ...Sivappu arisi aval: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சிவப்பரிசி அவல்..வெறும் 5 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி..?

மீதம் இருக்கும் பொடியை டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். தேங்காய் துருவல் சேர்த்து இருப்பதால் போடி சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.

எனவே, சாதம் நன்றாக சூடாகி வந்ததும், எள்ளு பொடி சாதத்தில் எல்லா இடங்களிலும் படும்படி கிளறி விட்டதும் அடுப்பை அணைத்து விடுங்கள்.  வரப்போகும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த இந்த ரெசிபியை உங்க வீட்டில் செய்து அசத்துங்கள்..

மேலும் படிக்க ...Sivappu arisi aval: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சிவப்பரிசி அவல்..வெறும் 5 நிமிடத்தில் தயார் செய்வது எப்படி..?

click me!