Sivappu arisi aval
தேவையான பொருள்கள்:
சிகப்பு அவல் – 1/2 கப்
கடுகு, உளுத்தம் பருப்பு – 1 டீஸ்புன்
பச்சை மிளகாய் – 2
முந்திரி – 5
தேங்காய் துருவியது – 1 கப்
எண்ணெய் – 2 டீஸ்புன்
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்புன்
இஞ்சி நறுக்கியது – 1 துண்டு
Sivappu arisi aval
செய்முறை விளக்கம்:
1. அவல் உப்புமா தயார் செய்வதற்கு தட்டையான சிகப்பரிசி அவலை எடுத்து 5 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி வைத்து கொள்ளுங்கள். முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, போட்டு தாளித்து கொள்ளுங்கள். பிறகு முந்திரியை போட்டு வறுத்து எடுத்து விடுங்கள்.
Sivappu arisi aval
2. அதன் பிறகு நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, துருவிய தேங்காய், மிளகாய் என அனைத்தையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள். அதில் உப்பு கால் டீஸ்பூன் சேர்த்த பிறகு, அலசி வடிகட்டி எடுத்து வைத்த அவலை சேர்த்து நன்றாக கிளறி விட்டுங்கள்.
3. இறுதியாக உப்புமாவை இறக்குவதற்கு ஐந்து நிமிடம் முன்பு, அதில் எலுமிச்சை பழச்சாறை ஊற்றி ஒரு முறை கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.
பின் குறிப்பு: உங்களுக்கு தேவைப்பட்டால் இதில் பீன்ஸ் கேரட் போன்ற உங்களுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்து கிச்சடி போல கூட செய்து கொடுக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
மேலும் படிக்க...Sani Peyarchi 2022: அக்டோபர் 23ல் சனி பெயர்ச்சியால்...திடீர் பண மழையில் நனையும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?