Vada Pav : மும்பை ஸ்ட்ரீட் புட் வடா பாவ் ரெசிபி! - ஈசியா செய்யலாம் வாங்க!

First Published Sep 22, 2022, 3:36 PM IST


வடா பாவ்/வடா ப்ரட் வட இந்தியாவின் பிரபலமான ஒரு சிற்றுண்டி. பாவ் பன்னும் சாஸும் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

உருளைக் கிழங்கு , பட்டாணி , வடை மற்றும் பன் சேர்ப்பதால் ஒன்று சாப்பிட்டால் கூட பசி அடங்கி விடும். தினமும் ரெகுலர் ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பதற்கு பதிலாக இதையும் ஒரு முறை செய்து பார்க்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இதனை எவ்வாறு செய்யலாம் என்பதனை இன்று நாம் பார்க்க போகிறோம்.

வயிற்று உபாதைகள் ,வயிற்றுப்புண், இரைப்பை கோளாறுகள், குடல் உபாதைகள் உருளைக்கிழங்கு வரப்பிரசாதமாகும். உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது.

பட்டாணி சாப்பிடுவதால் ஞாபகச்தி மேம்படும். மூளை பலம் பெறும். மேலும் இதில் அதிகமான பாஸ்பரஸ் இருக்கின்ற காரணத்தினால் குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்காகும்.

உளுந்தில் அதிகமான இரும்புச்சத்து உள்ளதால் இது உடலுக்கு வலுவைக் கொடுக்கும். உடல் பலவீனமாக இருப்பவர்கள் உளுந்து சாப்பிட்டால் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

உளுந்தில் செய்த வடை , உருளை மற்றும் பட்டாணியை உணவில் எடுத்துக் கொள்வதால் எவ்வளவு நன்மைகள் என்று தெரிந்து கொண்டோம். இப்போது வடா பாவ் எவ்வாறு செய்வது என்பதை காணலாம். இதற்கு தேவையான பொருட்களை முதலில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பன் – 4.

வெண்ணெய் - தேவையான அளவு

டொமட்டோ கெட்ச் அப் - தேவையான அளவு

பஜ்ஜி மாவு – 1/2 கப்

சோல மாவு - 2 ஸ்பூன்

உருளை கிழங்கு பட்டாணி மசாலாவிற்கு

உருளைக் கிழங்கு 1/4 கிலோ

பச்சை பட்டாணி 100 கிராம்

அல்லது

(பிரோசன் பட்டாணி)- 100கிராம்

வெங்காயம் 1

பச்சைமிளகாய் 1

மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்

சீரகம் 1/4 ஸ்பூன்

கடுகு 1/4 ஸ்பூன்

பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கையும் , பட்டாணியையும் வேக வைத்துக் கொள்ள வேண்டும். அகன்ற வானலியில் எண்ணையை ஊற்றி சீரகம், கடுகு, பச்சை மிளகாய் , கருவேப்பிலை மற்றும் பெருங்காயப்பொடி சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக வெட்டிய வெங்காயம் , மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின் வெந்த உருளைகிழங்கையம் , பட்டாணியையும் சேர்த்து நன்கு மசித்து கிளறி விட வேண்டும். ஆறிய உருளை மசாலாவை சிறிய உருண்டைகளாக பிடித்துவைக்கவும்.

பன்னை வெண்ணெய்யிட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பஜ்ஜிமாவை சோள மாவுடன் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணையை காயவைத்து உருட்டிய மசாலா உருண்டைகளை பஜ்ஜிமாவில் தோய்த்து பொரித்து எடுக்க வேண்டும்.

பொரித்த பன்னில் ஒரு பக்கம் கெட்சப்பும், மறுபக்கம் க்ரீன் கார சட்னி தடவி ஒரு பொரித்த மசாலா பஜ்ஜியை நடுவில் வைத்து மூடவும். அவ்ளோதாங்க மும்பை ஸ்ட்ரீட் புட் வடா பாவ் ரெடி!

click me!