Fruit Desert : சமையல் அறைக்கு செல்லாமல் ஒரு ரெசிபி செய்வோமா?

First Published Sep 19, 2022, 8:18 AM IST

உங்க குழந்தைங்க பழங்களை சாப்பிடுவதில்லை என்று கவலையா? அப்போ இதை செய்து கொடுங்க. மிச்சம் இல்லாமல் மற்றும் இன்னும் வேண்டும் என்று அடம் பிடித்து கேட்பார்கள். என்னங்க ! என்ன ரெசிபி என்று தெரியலையா?
 

உங்க குழந்தைங்க பழங்களை சாப்பிடுவதில்லை என்று கவலையா? அப்போ இதை செய்து கொடுங்க. மிச்சம் இல்லாமல் மற்றும் இன்னும் வேண்டும் என்று அடம் பிடித்து கேட்பார்கள். என்னங்க ! என்ன ரெசிபி என்று தெரியலையா?
 

ப்ரூட் ட்ஸர்ட் தாங்க இன்னைக்கு நாம பார்க்க போற ரெசிபி .
வீட்டில் இருக்குற பழங்களை வைத்து குழந்தைகளுக்கு பிடித்தமான , சுவையான, ஈஸியான அதே சமயம் ஆரோக்கியத்திற்கு பஞ்சம் இல்லாத ஒரு ரெசிபி தான் இந்த ப்ரூட் ட்ஸர்ட் .
 

இந்த ரெசிபியில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் இது குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் மிகவும் நல்லது.
இந்த ப்ரூட் ட்ஸர்ட் ரெசிபியை மிகவும் விரைவாகவும் சுலபமாகவும் செய்யலாம் எனவே ஆரோக்கியமான ரெசிபிக்கு சமையலறையிலயே கிடைக்காமல் எளிதாக முடித்து விருப்பத்துடன் இந்த உணவை சாப்பிடலாம். குறிப்பாக குழந்தைகள் விருப்பமாகவும் , மகிழ்ச்சியுடனும் சாப்பிடுவார்கள். சரி வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் :
Leg Pain : ''கால் வலியா?'' - அலட்சியம் வேண்டாம்! - சில வீட்டு வைத்திய முறைகள் இங்கே!!

ஆப்பிள் 1 ( துண்டுகளாக நறுக்கியது)
கிவி 1 ( துண்டுகளாக நறுக்கியது)
பைன் ஆப்பிள் 1 (துண்டுகளாக நறுக்கியது)
வாழைப்பழம் 1 ( தோல் உரித்து துண்டுகளாக வெட்டியது)
மாதுளை 1 கப்
க்ரேப்ஸ் 100 கிராம்
ஸ்ட்ராபெரிஸ் 100 கிராம்
1 கப் கெட்டி தயிர்
1/2 ஸ்பூன் தேன்
2 பேரிச்சை
3 பாதாம்
3 முந்திரி
3/4 கப் வெண்ணிலா ஐஸ் கீரீம்

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் வெட்டிய பழங்கள் (ஆப்பிள், கிவி, பைன் ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை மற்றும் க்ரேப்ஸ்) ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். ஸ்ட்ராபெரி, கெட்டி தயிர் மற்றும் தேன் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும் . மிக்ஸி ஜாரில் உள்ளவற்றை பாத்திரத்தில் உள்ள பழங்களின் மீது ஊற்றவும் .

கர்ப்பிணிப் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும் '''ஈரல் வறுவல்''!!

முந்திரி மற்றும் ஊறிய பாதாமை இதன் மேல் தூவ வேண்டும். பின் இதன் மேல் வெண்ணிலா ஐஸ் கீரீமை வைக்க வேண்டும். அதன் பின் மீண்டும் துருவிய பாதாம் மற்றும் துருவிய முந்திரியை சேர்க்க வேண்டும் . அவ்ளோதாங்க ஈஸியான அசத்தலான மற்றும் ஆரோக்கியமான ப்ரூட் ட்ஸர்ட் ரெடி! அட எங்கே கிளம்புறீங்க? ப்ரூட் ட்ஸர்ட் பண்ணி பார்க்கவா?

click me!