அறுசுவையும் கலந்த ''தேங்காய்ப்பால் மீன் குழம்பு'' செய்வது எப்படி?

First Published | Sep 14, 2022, 4:26 PM IST

மீன் உணவு வகைகளில் ஒரு சிறப்பான ஊட்டச்சத்து காணப்படுகிறது. அது ஒமேகா எனும் ஊட்டச்சத்து. இந்த ஒமேகா ஊட்டச்சத்து வேறு எந்த காய்கறி மற்றும் கோழி, ஆடு இறைச்சிகளிலும் கிடையாது. இந்த ஒமேகா ஊட்டச்சத்து குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.
 

தேங்காய் பால் மீன் குழம்பு எளியமுறையில் எப்படி செய்வது என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

அரை கிலோ மீன்

2 பெரிய வெங்காயம்

3 தக்காளி

2 கப் தேங்காய் பால்

4 ஸ்பூன் குழம்பு தூள்

3 ஸ்பூன் நல்லெண்ணெய்

அரை ஸ்பூன் கடுகு

அரை ஸ்பூன் வெந்தயம்

4 பச்சை மிளகாய்

ஒரு ஸ்பூன் பூண்டு விழுது

2 கப் புளி கரைசல்

தேவையான அளவு உப்பு
 

செய்முறை

முதலில், வெங்காயம் மற்றும் தக்காளியை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை கீறி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.

Tap to resize

Fish

பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வெங்காயம் வதங்கியதும், பூண்டு விழுது சேர்த்து வதக்கி, குழம்பு பொடி சேர்த்து கலக்க வேண்டும்.

Prawn Pepper Fry : ருசினாயன ''இறால் பெப்பர்'' ப்ரை செய்வது எப்படி?

குழம்பு பொடி வாசம் போனவுடன், புளிக்கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவேண்டும். பின்னர், குழம்பு கொதித்ததும் மீனையும் அதில் போட்டு, எல்லாம் ஒன்றாக சேர்த்து வேக வைக்க வேண்டும். இறுதியாக, மீன் பாதி வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவேண்டும். எண்ணெய் மேலே தெளிந்தவுடன் இறக்கி வைத்து பறிமாரினால் ருசியான தேங்காய் பால் மீன் குழம்பு ரெடி.

Latest Videos

click me!