நம்ம தமிழ்தாட்டு சிக்கன் குழம்பை விட ''கூர்க் சிக்கன் குழம்பு'' ருசி அதிகமா..? செஞ்சு பாருங்க..!

First Published | Sep 13, 2022, 3:04 PM IST

சும்மா சிக்கன் குழம்பு ஒரே மாதிரி செஞ்சு போர் அடிக்குதா.. கர்நாடகா ஸ்டைல்ல ஒருமுறை செஞ்சுபாருங்க, அசந்துபோய்ரூவீங்க. இப்போது, கூர்க் சிக்கன் குழம்பு எப்படி செய்வது என இந்தப் பதிவில் காணலாம்.
 

Coorg Chicken

சும்மா சிக்கன் குழம்பு ஒரே மாதிரி செஞ்சு போர் அடிக்குதா.. கர்நாடகா ஸ்டைல்ல ஒருமுறை செஞ்சுபாருங்க, அசந்துபோய்ரூவீங்க. இப்போது, கூர்க் சிக்கன் குழம்பு எப்படி செய்வது என இந்தப் பதிவில் காணலாம்.

Coorg Chicken

கூர்க் சிக்கன் குழம்பு செய்ய தேவைபடும் பொருட்கள்

ஒரு கிலோ சிக்கன்

ஒன்றரை ஸ்பூன் கூர்க் மசாலா பவுடர்

ஒன்றரை ஸ்பூன் மிளகாய் தூள்

காஸ் ஸ்பூன் மஞ்சள் தூள்

2 ஸ்பூன் ரெட் ஒயின் வினிகர்

உப்பு தேவையான அளவு


தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்

2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

அரை ஸ்பூன் கடுகு

ஒரு பெரிய வெங்காயம்

சிறிது கருவேப்பிலை

5 சின்ன வெங்காயம்

2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

2 ஸ்பூன் கூர்க் மசாலா தூள்

அரை ஸ்பூன் மிளகாய் தூள்

2 ஸ்பூன் கொத்தமல்லி (நறுக்கியது)

Latest Videos


கூர்க் மசாலா பவுடருக்க தவையான பொருட்கள்

3 ஸ்பூன் மல்லித்தூள்

அரை ஸ்பூன் சீரகம்

கால் ஸ்பூன் கடுகு

ஒரு ஸ்பூன் மிளகு

4 கிராம்பு

ஒரு துண்டு பட்டை

ஓரிரண்டு ஏலக்காய்

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் கூர்க் மசாலா தூளுக்கு கொடுத்த அனைத்து பொருட்களையும் போட்டு வறுத்து, ஒரு தட்டில் தனியாக எடுத்து நன்கு குளிர வைக்க வேண்டும். பின்னர் அதனை மிக்ஸி ஜாரில் போட்டு, நன்கு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

Fashion Tips : குண்டான பெண்கள் ஒல்லியாக தெரியணுமா? உங்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ!

Coorg Chicken

பிறகு சிக்கனை நறுக்கி எடுத்த நன்கு சுத்தமாக கழுவி, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஊற வைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, ஒன்று அல்லது இரண்டு மணிநேரம் வரை நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் குக்கில் வேக வைக்க வேண்டும். அதே வேளையில் மற்றொரு அடுப்பில், அகன்ற கடாயை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிவை சேர்த்து தாளித்து, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு, நன்கு வதக்க வேண்டும்.

Kadaai Paneer : வடநாட்டு ஸ்டைலில் ருசியான ''கடாய் பன்னீர் கிரேவி''

பின்னர், மிளகாய் தூள், கூர்க் மசாலா தூள் ஆகியவை சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். இறுதியாக, வெந்து கொண்டிருக்கும் சிக்கனை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கிளறி, சிக்கன் வேகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும். அதில், கொத்தமல்லியை தூவி 15-20 நிமிடம் மூடி வைத்தால், சூப்பரான கூர்க் சிக்கன் குழம்பு தயார்!!

click me!