Nandu Recipe : நாக்கில் எச்சில் ஊறும் சுவை ''செட்டிநாடு நண்டு குழம்பு'' செய்வது எப்படி?

First Published | Sep 12, 2022, 1:30 PM IST

நாக்கில் எச்சில் ஊர வைக்கும் சுவையான செட்டிநாடு நண்டு குழம்பு செய்வது எப்படி என இந்தப் பதிவில் காணலாம்.

காரைக்குடி செட்டிநாட்டு உணவுகளானது தனித்துவமான மசாலாப் பொருட்கள் மற்றும் நுட்பமான சுவைகளின் மந்திர கலவையாகும். தனித்துவமான நறுமணம் மற்றும் ருசி இவற்றை ஒரு சிறந்த சமையல் படைப்பாக ஆக்குகின்றன.

காரைக்குடி செட்டிநாடு உணவு வகைகளுக்கு உலக அளவில் எந்த அறிமுகமும் தேவையில்லை, ஏனெனில் இது உலகெங்கிலும் உள்ள பல உணவுப் பிரியர்களை அதன் செழுமையான, காரம் மற்றும் தனித்துவமான சுவை உள்ளிட்ட அம்சங்களுடன் கவர்ந்துள்ளது.

இப்போது, நாக்கில் எச்சில் ஊர வைக்கும் சுவையான செட்டிநாடு நண்டு குழம்பு செய்வது எப்படி என இந்தப் பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்

ஒரு கிலோ நண்டு

ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்

இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

5 தக்காளி

400 கிராம் சின்ன வெங்காயம்

5 ஸ்பூன் மிளகாய் தூள்

2 ஸ்பூன் கரம் மசாலா தூள்

ஒரு தேங்காய் (துருவியது)

15 பச்சை மிளகாய்

3 ஸ்பூன் சோம்பு

கொஞ்சம் கொத்தமல்லி

கொஞ்சம் கறிவேப்பிலை

கொஞ்சம் கடலை பருப்பு

தேவையான அளவு உப்பு

தேவையாள அளவு எண்ணெய்

Chappathi With Kuruma : சப்பாத்திக்கு ஒரு புதுவித சைட் டிஸ் ''காலிப்ளவர் பட்டாணி குருமா''!
 

Tap to resize

Nandu Recipe

செய்முறை

முதலில், அடுப்பில் கடாய் வைத்து அதில், ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளியைப் போட்டு லேசாக வதக்கிக் கொள்ள வேண்டும். வதக்கியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். கடலைப் பருப்பையும் லேசான சூட்டில் மொறுமொறுப்பாக வறுத்து எடுத்து, துருவியத் தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும். அதில் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர், தாளித்த பாத்திரத்தில் சுத்தம் செய்த நண்டு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள தக்காளி வெங்காயம் விழுது மற்றும் நண்டு ஆகியவற்றை போட்டு அனைத்தும் நனையும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும்.

Chettinad Mushroom Briyani ; "செட்டிநாடு காளான் பிரியாணி" - வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் வாங்க!

நண்டு வெந்ததும் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் தேங்காய் விழுது சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடம் வேகவைத்து இறக்கி, கொத்தமல்லி தலைகள் தூவினால் சுவையான செட்டிநாடு நண்டு குழம்பு ரெடி!

Latest Videos

click me!