Khale spinach : ஊட்டச்சத்து சூப்பர்ஸ்டார் "கேல் கீரை" கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

First Published | Sep 10, 2022, 9:30 PM IST

கேல் கீரை ஒன்றும் புதிதாக தோன்றிய கீரை அல்ல. இது வடக்கு ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான கீரை வகையாகும். இப்போது அமெரிக்கா முழுவதும் பயிரிடப் பட்டு மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் முக்கிய உணவாக பயன்படுகிறது.

காலே சுருள் காலே, டைனோசர் காலே ரெட்போர் காலே, ரஷ்ய காலே என்று நான்கு வகையாக கேல் கீரையை பிரிக்கபட்டுள்ளது.

கேல் கீரை நன்மை

வைட்டமின்கள் A, வைட்டமின் K, வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், தாமிரம் மற்றும் மாங்கனீஸ் ஆகிய ஊட்டச்சத்து காரணமாக கேல் கீரை ஒரு ஊட்டச்சத்து சூப்பர் ஸ்டார் என்றும் சொல்லலாம்.

ஒரு கப் அளவிளன பச்சை காலே கேல் கீரையில் வெறும் 33 கலோரிகள் மற்றும் 7 கிராம் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது.

இரத்த அழுத்தம் போக்கும்

கேல் கீரையில் உள்ள பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகள், உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்துகின்றன. இதன் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
 

உடல் எடை குறைய

உடல் எடை குறைக்க முயற்சிக்கும்போது, ​ குறைந்த கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்ள வேண்டும். 33 கலோரிகளைக் கொண்ட காலே கீரை எடை இழப்புக்கான முக்கிய உணவுத் தேர்வாகும். இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகப்படியாக நிறைந்துள்ளது, இது பசியை குறைத்து, நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்கிறது.

இதய பலப்படுத்தும்

கேல் கீரையில் போதுமான ஒமேகா கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் C மற்றும் வைட்டமின் K உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும்.

கேல் கீரையில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது.
 

Tap to resize

கொழுப்பைக் குறைக்கும்

காலே கீரையில் பித்த அமிலம் சீக்வெஸ்ட்ராண்ட்ஸ் எனப்படும் ஒரு சேர்மம் நிரைந்துள்ளது. இது இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் வல்லமை படைத்தது.

சர்க்கரை நோய்க்கு மருந்து

காலே கீரையில் கந்தகமும் நிறைந்துள்ளது, இது நச்சு நீக்கத்திற்கு பெரிதும் உதவுகிறது. குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்திற்கு கந்தகம் அவசியமாகும் மேலும் நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது.
 

புற்று நோயை தடுக்கும் காலே

காலிஃபிளவர், பிரஸ்ஸல்ஸ் முளைகள், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, காலார்ட் கீரைகள், கோஹ்ராபி, ருடபாகா, டர்னிப்ஸ் மற்றும் போக் சோய் ஆகியவற்றைப் போன்று காலே கீரையும் ''க்ருசிபெரஸ்'' காய்கறி குடும்பத்தைச் சேர்ந்தது.

இந்த காய்கறிகள் பல வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன.
 

Latest Videos

click me!