10 நிமிடத்தில் சுவையான ''முருங்கைக்காய் கிரேவி''!

First Published Sep 10, 2022, 6:53 PM IST

மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கைக்காய் கிரேவியை 10 நிமிடத்தில் தயார் செய்யலாம் வாங்க.. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
 

முருங்கை காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உணவு வகைகளை சாப்பிட்டு வர சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும். வாரத்தில் குறைந்தது இரு முறை முருங்கைக்காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.

அவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கைக்காய் கிரேவியை 10 நிமிடத்தில் தயார் செய்யலாம் வாங்க.. அது எப்படி என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு - அரை ஸ்பூன்

வெந்தயம் - அரை ஸ்பூன்

உளுந்து - கால் ஸ்பூன்

சீரகம் - ஒரு ஸ்பூன்

கருவேப்பிலை சிறிது

4 வெங்காயம் நறுக்கியது

10 முருங்கைக்காய்கள்

மஞ்சள் - அரை ஸ்பூன்

மல்லித்தூள் - அரை ஸ்பூன்

மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்

தேவையான அளவு தண்ணீர்

உப்பு தேவையான அளவு

கடலை மாவு - ஒரு சிறு கப்

தேங்காய் பால் 200 மி.லி.

கொத்தமல்லி இலைகள் கொஞ்சம்
 

செய்முறை

Chettinad Mushroom Briyani ; "செட்டிநாடு காளான் பிரியாணி" - வீட்டிலேயே எளிமையாக செய்யலாம் வாங்க!
 

முதலில் கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுந்து, சீரகம், கறிவேப் பிலையைப் போட வேண்டும்.
.
பின்னர், அதனுடன் வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். பின், முருங்கைக்காய், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கலக்கவும். நீரும் உப்பும் சேர்த்து, முருங்கைக்காய் வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.

இறுதியாக கடலை மாவு, தேங்காய் பால் கலவையை கடாயில் கொட்டி கலக்க வேண்டும். கிரேவி கெட்டியாகும் வரை சமைத்து, கொத்தமல்லி இலையால் அலங்கரித்து பரிமாரவும். சுவையான ஆரோக்கியமான முருங்கைக்காய் கிரேவி தயார்.
 

click me!