Idly with Chatni : காரசாரமான செட்டிநாடு மிளகாய் சட்னி! இனி இட்லி பத்தாது!

First Published Sep 12, 2022, 11:00 AM IST

நல்ல காரசாரமான ருசியான செட்டிநாடு மிளகாய் சட்னி எப்படி எளிதாக அரைப்பது என இந்தப் பதிவில் காணலாம்..

செட்டிநாட்டு உணவுகளானது தனித்துவமான மசாலாப் பொருட்கள் மற்றும் நுட்பமான சுவைகளின் மந்திர கலவையாகும். தனித்துவமான நறுமணம் மற்றும் ருசி இவற்றை ஒரு சிறந்த சமையல் படைப்பாக ஆக்குகின்றன.

செட்டிநாடு உணவு வகைகளுக்கு உலக அளவில் எந்த அறிமுகமும் தேவையில்லை, ஏனெனில் இது உலகெங்கிலும் உள்ள பல உணவுப் பிரியர்களை அதன் செழுமையான, காரம் மற்றும் தனித்துவமான சுவை உள்ளிட்ட அம்சங்களுடன் கவர்ந்துள்ளது.

இப்பொது, நல்ல காரசாரமான ருசியான செட்டிநாடு மிளகாய் சட்னி எப்படி எளிதாக அரைப்பது என இந்தப் பதிவில் காணலாம்..

சட்னி அரைக்க தேவையான பொருட்கள்

10 சின்ன வெங்காயம்

6 பல் பூண்டு

10 வர மிளகாய்

3 தக்காளி

தேவையான அளவு உப்பு

சட்னியை தாளிக்க தேவையான பொருட்கள்

6 ஸ்பூன் நல்லெண்ணெய்

கொஞ்சம் கடுகு, உளுந்து மற்றும் கருவேப்பிலை

செய்முறை

முதலில், மேலே கூறிய தேவையான பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு பச்சையாக அரைந்து கொள்ளவும்.

பின்னர், கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்துக்கொள்ளவும், பின்னர் அரைந்து வைத்த சட்னியையும், தாளிப்பையு் சேர்த்து ஒன்றாக கலந்து அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும், பின்னர், தேவையான அளவு உப்பை சேர்த்து பரிமாரினால் சுவையான காரசாரமான மிளகாய் சட்னி ரெடி.

இந்த மிளகாய் சட்னி, இட்லி, தோசை, சப்பாத்தி, கோதுமை தோசை, ரவா தோசை, ஊத்தப்பம், கார பனியாரம் என அனைத்துவகைக்கும் ருசியாக இருக்கும்.

click me!