நாட்டு கோழி குழம்பு தானே இருக்கு.. அதென்ன ''நாட்டுகோழி ரசம்'' செய்யலாம் வாங்க!

First Published | Sep 13, 2022, 7:56 PM IST

உடல் வலு இல்லாத பூப்பெய்திய பெண்கள், புது மணத்தம்பதிகள், நீடித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என சகலருக்கும் உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகவும் கொடுக்கப்படுவது நாட்டுக்கோழிக் கறி. அந்த நாட்டுக்கோழிக் கறியை வைத்து எளிதான முறையில் ரசம் செய்வது என இப்பதிவில் காணலாம்.
 

Kozhi Rasam

நாட்டுக்கோழி ரசம் வைக்க தேவையான பொருட்கள்

அரை கிலோ நாட்டுக்கோழி

15 சின்ன வெங்காயம்

ஒரு ஸ்பூன் சீரகம்

இரு ஸ்பூன் மிளகு

ஒரு பச்சை மிளகாய்

இரு தக்காளி

இரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

ஒரு பட்டை, லவங்கம்

ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்

ஒரு ஸ்பூன் மல்லித் தூள்

அரை ஸ்பூன் மஞ்சள் தூள்

தேவையான அளவு கருவேப்பிலை & மல்லி இலை

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

Kozhi Rasam

கோழி ரசம் செய்முறை

முதலில், குக்கரில் எண்ணெய் ஊற்றி மசாலா பொருட்களான பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் என அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டு்ம்.

பின்னர், அதோடு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு நைசாக வதக்கி கொள்ள வேண்டும்.

Latest Videos


Kozhi Rasam

முன்னதாக மிளகு , சீரகம் இரண்டையும் மிக்சி ஜாரில் போட்டு பொடித்து கொள்ள வேண்டும். பொடித்த மிளகு , சீரகம் , மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, சுத்தம் செய்யப்பட்டு, சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்ட கோழிக்கறி என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் 7 விசில் வரும் வரை வேக விட வேண்டும்.

இறுதியாக குக்கரில் இருந்து இறக்கிவைத்து அதனுடன் கருவேப்பிலை, மல்லி இலை தூவி பரிமாறினால் நாட்டுக்கோழி ரசம் ரெடி!. நாட்டு கோழி ரசம் சாதத்தில் பிசைந்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். இதனை தனியாக சூப் மாதிரியும் குடித்து சாப்பிடலாம். உடல் அலுப்பு தீரும்.

click me!