அசைவ பிரியர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு என்றால் அது பிரியாணி தான். இறைச்சி, அரிசி மற்றும் பல மசாலாக்களை கொண்டு செய்யப்படும் உணவு தான் பிரியாணி. ஆம்பூர் பிரியாணி, ஹைராபாத் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி, முகலாய பிரியாணி, பட்கல் பிரியாணி என பல விதமான பிரியாணி வகைகள் உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் தயாரிக்கப்படும் சுவையான பிரியாணியை தான் ஆம்பூர் பிரியாணி என்கிறோம். ஆற்காட்டை ஆண்டு வந்த ஆற்காடு நவாப் மூலம் பிரபலமடடைந்த இந்தப் பிரியாணி ஆம்பூருக்கு சிறப்பான பெயரை கொடுத்துள்ளது. இன்றைய பதிவில் ஆம்பூர் சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்பதை பற்றி நாம் காண உள்ளோம்.