Carrot Chutney : இதய நோய் வராமல் பாதுக்காக்க ஆரோக்கியமான கேரட் சட்னி!

First Published | Oct 3, 2022, 1:17 PM IST

நாம் கேரட் சேர்த்து பொரியல், சாம்பார், ஜூஸ் போன்றவைகளை செய்து சுவைத்து இருப்போம். கேரட் வைத்து சட்னி எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 

பொதுவாக நாம் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று தான் இட்லி , தோசைகளுக்கு வைத்து சாப்பிடுவோம். கேரட் சட்னி! முயற்சி செய்து உள்ளீர்களா? இந்த சட்னி இட்லி, தோசை , சப்பாத்திக்கும் வைத்து சாப்பிடலாம். 

நாம் கேரட் சேர்த்து பொரியல், சாம்பார், ஜூஸ் போன்றவைகளை செய்து சுவைத்து இருப்போம். கேரட் வைத்து சட்னி எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 

கேரட்டின் மகத்துவம்:

உணவில் கேரட் சேர்த்துக் கொல்வதால் இருதய வால்வுகளில் உள்ள கொழுப்பை அடைக்காமல் , இருதய நோய்கள் வருவதை தடுக்கும் ஆற்றல் பெற்றது.

கேரட்டில் இருக்கும் வைட்டமின் ‘ஏ’ சத்து கண்களின் விழித்திரையை பாதுகாப்பதால் கண் பார்வை நன்றாக இருக்க துணை புரியும். 

மேலும் தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. 
இது உடம்பில் உள்ள கிருமிகளை ஒழித்து நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.

Latest Videos


தேவையான பொருட்கள்: 

சட்னி செய்ய:

எண்ணெய் - 1 ஸ்பூன் 
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 8 பல் 
துருவிய கேரட் - 1 கப் 
வரமிளகாய் - 3 
புளி சிறிது 
உப்பு - தேவையான அளவு

மைசூரின் மதூர் வடை! செய்யலாம் வாங்க!

தாளிக்க:

எண்ணெய் -2 ஸ்பூன் 
கடுகு-1/2 ஸ்பூன் 
கரு வேப்பிலை - 1 கொத்து
பெருங்காய தூள் 1 சிட்டிகை 
 

செய்முறை:

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கேரட்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொண்டு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும். 

அடுத்து வாணலியை அடுப்பில் வைத்து,எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப்பருப்பு சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் , காய்ந்த மிளகாய், வெங்காயம் மற்றும் புளி சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கி விட்டு பின் அதனை இறக்கி ஆற விட வேண்டும்.

Brinjal Kora : ஆந்திரா ஸ்பெஷல் வங்காய கோரா!

இப்போது வதக்கி ஆற வைத்துள்ள கேரட், வெங்காயம், மிளகாய், கடலை பருப்பு மற்றும் புளி ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொண்டு சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1 Panஐ அடுப்பில் வைத்து, தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியில் சேர்க்கவும். அவ்வளவு தான் ! ஆரோக்கியமான கேரட் சட்னி தயார்!

click me!