பாரம்பரிய மணம், சுவை கொண்ட சுட்ட கத்திரிக்காய் தொக்கு..வீட்டில் எளிதான முறையில் செய்வது எப்படி?

First Published | Oct 2, 2022, 10:33 AM IST

Sutta kathirikkai thokku: பாரம்பரிய மணம், சுவை கொண்ட சுட்ட கத்திரிக்காய் தொக்கு எளிமையான முறையில் எப்படி தயார் செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

உங்கள் சிறு வயதில் பாட்டி செய்து கொடுத்த இந்த சுட்ட கத்திரிக்காய் தொக்கு, நிச்சயம் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால், அதனை எப்படி தயார் செய்வது என்பதை மறந்து இருப்பீர்கள். இந்த சூப்பரான ஆரோக்கியமான சுட்ட கத்திரிக்காய் தொக்கு வீட்டிலேயே எப்படி எளிமையான முறையில் தயார் செய்வது என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். 

 மேலும் படிக்க..Cholesterol: இயற்கை முறையில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் 8 உணவுகள்..மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்..
 

தேவையான பொருட்கள்: 

கத்தரிக்காய் - 6

காய்ந்த மிளகாய் - 10

சமையல் எண்ணெய் – இரண்டு டீஸ்புன் 

கறிவேப்பிலை - சிறிதளவு

புளி - எலுமிச்சை அளவு

வெல்லம் - சிறு துண்டு

உப்பு - தேவையான அளவு

Latest Videos


செய்முறை விளக்கம்: 

முதலில் கத்திரிக்காய் தொக்கு செய்வதற்கு பெரிய கத்திரிக்காய் ஏழு எடுத்து அதை 10 லிருந்து 15 நிமிடம்  வரை நெருப்பில் வாட்டி எடுக்க வேண்டும். கத்தரிக்காயை முழுசாக சுட வேண்டும் .

அதன் தோல் கருப்பாகி உதிர்ந்து விழும் வரை சுட வேண்டும். சுட்டதும் காய்ந்த மிளகாய்களையும் சுட்டு எடுக்க வேண்டும்,

பின் கத்தரிக்காய் மற்றும் காய்ந்த மிளகாய்களை மிக்ஸியில் போட்டு மைய அரைக்க வேண்டும்.

 மேலும் படிக்க..Cholesterol: இயற்கை முறையில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் 8 உணவுகள்..மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்..
 

இப்போது கடாய் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். இப்போது அரைத்த கத்தரிக்காய் விழுது சேர்த்து புளி கரைத்து ஊற்ற வேண்டும்.

உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும்.

இறக்கும் முன் வெல்லம் சேர்த்து இறக்கிவிடுங்கள். இதனுடன் நீங்கள் கரைத்து வைத்துள்ள வெல்லக் கரைசலை வடிகட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.

பின்னர், ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை ஊற வைத்து, அதன் தண்ணீரை வடிகட்டி சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

கொதித்து வரும் பொழுது நீங்கள் அரைத்து வைத்துள்ள கத்திரிக்காய் பேஸ்டையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இது நன்கு கெட்டியாக தொக்கு போல வர வேண்டும். அவ்வளவுதான் சுட்ட கத்தரிக்காய் தொக்கு தயார்..! 

 மேலும் படிக்க..Cholesterol: இயற்கை முறையில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் 8 உணவுகள்..மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்..
 

click me!