Lemon leaves: உடல் எடையை குறைத்து, சிறுநீரகக் கற்கள் பிரச்சனையை சரி செய்வதற்கு...தினமும் இந்த ஒரு இலை போதும்..

First Published | Sep 25, 2022, 10:07 AM IST

Lemon leaves: எலுமிச்சை இலைகள் பல்வேறு மருத்துவ குணம் கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இந்த இலைகள் பல வகையான நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும்.

எலுமிச்சை பழம் சாப்பிடுவதன் நன்மைகள் பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஆனால் அதன் இலைகள் பற்றி பலருக்கு தெரியாது.ஆம் நாம் வேண்டாம் என்று நினைக்கும் இந்த எலுமிச்சை இலைகள் பல்வேறு மருத்துவ குணம் கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இந்த இலைகள் பல வகையான நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இந்த எலுமிச்சம்பழம் இலைகள் கசப்பானவை என்பதால், அவற்றை உண்ண வேண்டாம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இந்த இலைகளை சாப்பிடுவது அல்லது அதன் சாறு குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

 மேலும் படிக்க...ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்..இல்லையென்றால் சீக்கிரம் முடி கொட்டி விடும்!

lemon

எலுமிச்சை இலைகளை எப்படி சாப்பிடுவது?

எலுமிச்சை இலைகள் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இவற்றை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது இலைகளை தேநீர் முறையிலும் சாப்பிடலாம். இந்த இலைகள் தேநீருக்கு நல்ல சுவையைத் தரும். இந்த தேநீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. 

Tap to resize

எலுமிச்சை இலைகளின் மருத்துவ குணங்கள் 

எலுமிச்சை இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட், டானின், ஃபிளாவனாய்டு மற்றும் பினாலிக் கூறுகள் உள்ளன. மேலும், இந்த இலைகளில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. இதன் ஆன்டி மருந்துகள்  நுண்ணுயிர் எதிர்ப்பு, காய்ச்சல் எதிர்ப்பு, புற்றுநோய் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. 

ஒற்றைத் தலைவலி வலியிலிருந்து நிவாரணம்

 ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எலுமிச்சை இலைகள் நல்ல மருந்தாகப் பயன்படும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலுமிச்சை இலைகளில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட் உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது. இது ஒற்றைத் தலைவலியையும் குறைக்கிறது. ஒற்றைத் தலைவலி மற்றும் மனநலப் பிரச்சனைகளைப் போக்க இந்த இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

 மேலும் படிக்க...ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்..இல்லையென்றால் சீக்கிரம் முடி கொட்டி விடும்!

தூக்கமின்மையிலிருந்து விடுதலை 

 தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு எலுமிச்சை இலைகள் சிறந்த ஒன்றாக பயன்படுகிறது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் ஆல்கலாய்டுகள் தூக்கமின்மை மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.  

எடையை குறைக்க உதவும் 

 அதிக எடை கொண்டவர்களுக்கும் எலுமிச்சை பயனுள்ளதாக இருக்கும். எலுமிச்சம்பழ இலையில் தயாரிக்கப்பட்ட ஜூஸை குடித்து வந்தால், உடல் எடை கட்டுக்குள் இருக்கும். ஏனெனில் இதில் பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது.  இதற்கு எலுமிச்சை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இது எடையைக் குறைப்பதில் திறம்பட செயல்படுகிறது.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கிறது!

 எலுமிச்சை இலைகளில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது . எனவே சிறுநீரக கற்கள் இருந்தால் எலுமிச்சை இலைகளை எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள். 

 மேலும் படிக்க...ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்..இல்லையென்றால் சீக்கிரம் முடி கொட்டி விடும்!

Latest Videos

click me!