Capsicum Seeds: குடைமிளகாய் விதைகளில் ஏராளமான மருத்துவ பயன்கள் இருக்கு தெரியுமா..? மிஸ் பண்ணாம சாப்பிடுங்கள்..

First Published Sep 24, 2022, 10:54 AM IST

Capsicum Seeds: குடைமிளகாய் விதையில் அனைத்து நன்மைகளும் உள்ளன. எனவே, குடைமிளகாய் விதைகளின் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால்,இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

হজম ক্ষমতা

குடைமிளகாய் காய்கறிகளுக்கு சுவை மற்றும் மணம் தரும் வண்ணமயமான காயாகும். இது சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கிறது. காரம் அதிகமில்லாத இம்மிளகாய், மிளகாயின் மணமும், மிளகிற்கு நிகரான சுவையும் உடையது.  இதை சாலடுகள், கிரேவிகள் மற்றும் சில சிக்கன் உணவுகளில், சேர்த்து நீங்கள் சாப்பிட்டுருப்பீர்கள், ஆனால், இதன் விதைகளில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

மேலும் படிக்க...Dragon Fruit: வாரம் ஒருமுறை டிராகன் பழம் சாப்பிட்டால்..உடலில் இவ்வளவு ஆரோக்கிய மாற்றம் வருமா..?
 

শরীরের ঘাটতি পূরণে

குடைமிளகாயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இவற்றை  சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது, இருதய நோய்களுக்கு சிகிச்சையளிப்பது முதல் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது வரை, ஏராளமான மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. அவை என்னென்னெ என்பதை இங்கே பார்க்கலாம்.

வைட்டமின் சி:

வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட நீங்கள் பரிந்துரைக்கும் போது, கேப்சிகம் ஒரு சிறந்த தேர்வாகும். இதன் விதைகள் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அழிக்கிறது.  குறிப்பாக, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

பார்வை திறனை மேம்படுத்துகிறது:

கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் குடமிளகாய் விதைகள் உதவுகிறது. இந்த விதைகளில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது உங்கள் பார்வையை திறனை மேம்படுத்துகிறது. மேலும், குடைமிளகாய் விதை, மிளகு ஆகியவை  உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன.

மேலும் படிக்க...Dragon Fruit: வாரம் ஒருமுறை டிராகன் பழம் சாப்பிட்டால்..உடலில் இவ்வளவு ஆரோக்கிய மாற்றம் வருமா..?


சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது: 

பளபளப்பான சருமம் மற்றும் வலுவான கூந்தலுக்கான வைட்டமின் ஈ நிறைந்த கேப்சிகம் சாப்பிடுங்கள்.  இது உங்களுக்கு அழகான சருமம் மற்றும் கூந்தலை வழங்க உதவுகிறது. குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு  ஆரோக்கியம் தருகிறது.

எடை இழப்பு:

குடைமிளகாய் விதைகளில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளது. இதை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்காது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை தினசரி எடுத்து கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. குடமிளகாய் சாறு எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது.

 
உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது: 

குடமிளகாயில் இருக்கும் ஃபிளாவனாய்டுகளின் வளமான ஆதாரங்கள். இரத்தக் கட்டிகளைத் தடுக்கின்றன. இது வாய்வு தொல்லையை போக்கி மலச்சிக்கலை தடுக்கிறது. இது உடலில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது. எனவே, உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு காய்கறி என்பதை நினைவில் கொள்ளுங்கள். குடமிளகாய் செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். 

மேலும் படிக்க...Dragon Fruit: வாரம் ஒருமுறை டிராகன் பழம் சாப்பிட்டால்..உடலில் இவ்வளவு ஆரோக்கிய மாற்றம் வருமா..?

click me!