World Lung Day: உங்கள் நுரையீரல் வலுவாக இருக்க உதவும் ஐந்து உணவுகள்! தினமும் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

First Published | Sep 25, 2022, 12:46 PM IST

World Lung Day 2022: புகைபிடித்தல், அசுத்தமான காற்றை சுவாசிப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று பலர் நுரையீரல் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். நுரையீரலைப் பாதுகாக்க உதவும் உணவுகள் என்னென்னெ என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

உலக நுரையீரல் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நுரையீரல் நமது உடலில் மிக முக்கியமான உறுப்புகளில்ஒன்றாகும் . நுரையீரலின் வேலை உயிரை காத்து தேவையான விலைமதிப்பற்ற ஆக்ஸிஜனை உங்கள் உடலுக்கு வழங்குவதாகும். எனவே ஒருவர் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

world lung day

ஆனால், இன்று மோசமான வாழ்க்கை முறையால் பலர் நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகரெட் பிடிப்பது, அசுத்தமான காற்றை சுவாசிப்பது இதனால் உண்டாகும் தூசி, புகை, மாசு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றால் நுரையீரல் பிரச்சனை ஏற்படுகிறது. 

Latest Videos


எனவே, நுரையீரலைப் பாதுகாக்க புகையிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதே உலக நுரையீரல் தினத்தின் கருப்பொருள். எனவே நம்முடைய நுரையீரலை உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகள் மூலம் நாம் வலிமையாக வைத்திருக்க வேண்டும். அப்படியான உணவுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பச்சை காய்கறிகள்:

பச்சை காய்கறிகள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பசலைக்கீரை, முட்டைகோஸ், பொக்கோலி, முருங்கை இலை போன்றவற்றில் நுரையீரலுக்கு வலிமை தரும் பல சத்துக்கள் உள்ளன. மேலும், இந்த காய்கறிகள் நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

தக்காளி

தக்காளியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், மாங்கனீஸ், மெக்னீசியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. தக்காளியில் உள்ள லைகோபீன் நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கிறது. எனவே நேரம் இருக்கும் போதெல்லாம் தக்காளி ஜூஸ் குடியுங்கள். 

apple

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இதில் உள்ள வைட்டமின் பி, கால்சியம் மற்றும் பொட்டாசியம் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. எனவே, தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆம், இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பல நோய்களை குணப்படுத்துகிறது. 

பீட் ரூட்

பீட் ரூட் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் இதில் நிறைந்துள்ள நைட்ரைட் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த பீட் ரூட் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. 

பெர்ரி

பெர்ரி ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக் பெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை நுரையீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இவற்றை சாப்பிடுவதால் உடலில் சேரும் கொலஸ்ட்ரால் குறைகிறது. இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். 


மஞ்சள்

மஞ்சள் ஒரு நோய்எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்தாகும் மருந்து. ஏனெனில் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. மஞ்சளில் உள்ள குர்குமின் பல நோய்களைக் குறைப்பதில் திறம்பட செயல்படுகிறது. நுரையீரலைப் பாதிக்கும் வைரஸை எதிர்த்துப் போராடும் திறன் மஞ்சள் நிறத்தில் இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 
 

click me!