யூரிக் அமிலம் இருக்கும் போது தோன்றும் அறிகுறிகள்:
யூரிக் அமிலம் இருக்கும் ஒருவருக்கு கீல்வாதம், பாதங்களில் கடுமையான வலி, விரல்களில் வீக்கம் மற்றும் குத்துதல் போன்ற வலி, கை மற்றும் கால் மூட்டுகளில் வலி, கால் விரலில் குத்துதல் மற்றும் நடக்க சிரமம் போன்றவை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயமும் அதிகமாகிறது. இந்த யூரிக் அமில பிரச்சனையில் இருந்து நிவாரணம் காண ஆரோக்கியமான இந்த உணவுகளை நிச்சம் எடுத்து கொள்ளுங்கள்.