Instant Acidity Relief: சாப்பிட்டதும் நெஞ்சில் எரிகிறதா? அசிடிட்டியை விரட்டும் 5 நிமிட வீட்டு வைத்தியம்!

Published : Oct 22, 2026, 12:12 PM IST

Instant Acidity Relief: சாப்பிட்டதும் நெஞ்சில் எரிகிறதா? தினமும் இரவில் இதே தொல்லையாக இருக்கிறதா? இனிமேல் கவலை வேண்டாம். அசிடிட்டியை விரட்டும் 5 நிமிட வீட்டு வைத்தியம் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
அசிடிட்டியை விரட்டும் 5 நிமிட வீட்டு வைத்தியம்

வயிற்றில் அதிகப்படியான அமிலம் சுரப்பதால் அசிடிட்டி பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், செரிமானக் கோளாறு எல்லாம் ஏற்படும். காரமான அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகள், காபி, மதுப்பழக்கம், மன அழுத்தம், சாப்பிட்ட உடனே தூங்குவது இதெல்லாம் தான் அசிடிட்டிக்கு முக்கியக் காரணமாகும். இந்த அசிடிட்டி பிரச்சினையைச் சரிசெய்ய உதவும் 6 உணவுகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

24
இஞ்சி

இஞ்சி நமது வயிற்றுக்கு நல்ல இதமளிக்கும். இதில் உள்ள 'ஜிஞ்சரால்' (gingerol) வீக்கத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது. செரிமானத்தையும் இது வேகப்படுத்தும். தினமும் காலையில் ஒரு கிளாஸ் இஞ்சி டீ குடித்தால் அசிடிட்டியிலிருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

மோர்

ப்ரோபயாடிக் சத்துகள் நிறைந்த மோர் அசிடிட்டி பிரச்சினையைச் சரிசெய்யும். இதில் உள்ள லாக்டிக் அமிலம் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையைச் சீராக வைக்க உதவுகிறது. செரிமானத்தை இன்னும் சிறப்பாக்க, மோரில் கொஞ்சமாக வறுத்த சீரகப் பொடியைச் சேர்த்துக் குடிக்கலாம்.

34
வாழைப்பழம்

நன்றாகப் பழுத்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது வயிற்றில் உள்ள அமிலத்துக்கு எதிராக இயற்கையாகவே செயல்படும். முக்கியமாகச் சாப்பாடு சாப்பிடுவதற்கு முன்பு ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. இதன் இனிப்புத் தன்மை அசிடிட்டி வராமல் தடுக்கும்.

சோம்பு

சாப்பிட்ட பிறகு சோம்பு மென்று சாப்பிடுவது மிகவும் நல்லது. வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு அரை டீஸ்பூன் சோம்பு சாப்பிட்டால், அதில் இருந்து 'அனெத்தோல்' (anethole) என்கிற வேதிப்பொருள் வெளியாகும். இது வயிற்றுத் தசைகளைத் தளர்த்தி, வயிறு உப்புசத்தைக் குறைக்கும். நெஞ்செரிச்சல் வராமலும் தடுக்கும். அதுமட்டுமில்லாமல், இடித்த சோம்பைச் சுடுதண்ணீரில் 5 நிமிஷம் ஊறவைத்து 'சோம்பு டீ' மாதிரியும் குடிக்கலாம். இது வயிற்றுக்கு இதமளிப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் போக்கும்.

44
துளசி இலைகள்

துளசியில் உள்ள மருத்துவ குணங்கள் அசிடிட்டிக்கு மிகச் சிறந்த தீர்வு தரும். துளசி இலைகளில் உள்ள ஆன்டி- அல்சர் மற்றும் அடக்கமான பண்புகள், வயிற்றில் அதிகப்படியான அமிலம் சுரப்பதைத் தடுத்து நிவாரணம் அளிக்கிறது.

நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி ஏற்படும் போது, சில துளசி இலைகளை நன்றாக மென்று சாப்பிடலாம். அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சில துளசி இலைகளைப் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, ஆறிய பின் அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் அசிடிட்டி சட்டெனக் குறையும்.

இளநீர்

இளநீர் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தைக் கொடுக்கும். செரிமான மண்டலத்தைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இது ரொம்பவே உதவும். இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் உடலின் pH அளவைச் சரியாக வைக்க உதவுகின்றன. இதனால் அசிடிட்டி குறையும். இளநீர் குடிப்பது தாகத்தைத் தணிப்பதோடு, செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

ஓமம்

சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசமாகவோ அல்லது பாரமாகவோ இருந்தால், அரை டீஸ்பூன் ஓமத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து மென்று சாப்பிடலாம். இதில் உள்ள 'தைமால்' செரிமானத்திற்குத் தேவையான கேஸ்ட்ரிக் ஜூஸ் உற்பத்தியை அதிகரிக்கிறது.

Read more Photos on
click me!

Recommended Stories