ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் என தவறாக நினைத்து நாம் சாப்பிடும் சில உணவுகள் தான் நம்முடைய உடலில் சர்க்கரை அளவு சட்டென உயருவதற்கு காரணமாக உள்ளன. ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் இந்த உணவுகளை தெரிந்து கொண்டு கவனமாக சாப்பிடுவது நல்லது.
பழங்கள் ஆரோக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பழ ஜூஸ்கள் பெரும்பாலும் அதிக சர்க்கரையைக் கொண்டிருக்கின்றன. ஒரு கப் ஆப்பிள் ஜூஸில் சுமார் 24 கிராம் சர்க்கரை இருக்கலாம், ஜூஸ் தயாரிக்கும் போது, பழங்களில் உள்ள நார்ச்சத்து நீக்கப்பட்டு, சர்க்கரை மட்டுமே மிஞ்சுகிறது. மேலும், கடைகளில் விற்கப்படும் பழ ஜூஸ்களில் செயற்கை இனிப்பூட்டிகளும் சேர்க்கப்படலாம். பழ ஜூஸ்களுக்கு பதிலாக, முழு பழங்களை சாப்பிடுவது நல்லது.
28
யோகர்ட் :
யோகர்ட் புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். ஆனால், ஃப்ளேவர்டு யோகர்ட்களில் அதிக சர்க்கரை சேர்க்கப்படுகிறது. ஒரு கப் ஸ்ட்ராபெரி யோகர்டில் சுமார் 26 கிராம் சர்க்கரை இருக்கலாம். இது தினசரி பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரை அளவை விட அதிகம். சர்க்கரை சேர்க்காத சாதாரண யோகர்ட்டை வாங்கி, வீட்டிலேயே பழங்கள் அல்லது தேன் சேர்த்து இனிப்பு கூட்டலாம்.
38
கெட்சப் :
இட்லி, தோசை, பர்கர், ஃபிரைஸ் போன்ற பல உணவுகளுடன் கெட்சப் சேர்த்து சாப்பிட நாம் விரும்புகிறோம். ஆனால், கெட்சப்பில் நீங்கள் நினைப்பதை விட அதிக சர்க்கரை உள்ளது. ஒரு தேக்கரண்டி கெட்சப்பில் சுமார் 4 கிராம் சர்க்கரை இருக்கலாம். இது சிறிய அளவு போல தோன்றினாலும், பல தேக்கரண்டி கெட்சப் பயன்படுத்தும் போது, சர்க்கரையின் அளவு கணிசமாக அதிகரிக்கும். கெட்சப்பிற்கு பதிலாக, தக்காளி சட்னி அல்லது வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சட்னிகளை பயன்படுத்தலாம்
காலை உணவிற்கு ஏற்ற தானியங்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடித்தமானவை. ஆனால், பல தானியங்களில் அதிக சர்க்கரை சேர்க்கப்படுகிறது. சில சாக்லேட் ஃப்ளேவர்டு தானியங்களில் ஒரு கிண்ணத்திற்கு 12 கிராம் சர்க்கரை இருக்கலாம். சர்க்கரை சேர்க்காத ஓட்ஸ், ராகி, கோதுமை போன்ற தானியங்களை தேர்வு செய்வது நல்லது.
58
பேக்கேஜ் செய்யப்பட்ட ரொட்டி :
ரொட்டி நம் அன்றாட உணவில் ஒரு முக்கிய பகுதி. ஆனால், கடைகளில் விற்கப்படும் பல பேக்கேஜ் செய்யப்பட்ட ரொட்டிகளில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. ஒரு துண்டு ரொட்டியில் 2 முதல் 4 கிராம் சர்க்கரை இருக்கலாம். முழு தானிய ரொட்டியை (Whole Wheat Bread) தேர்வு செய்வது நல்லது, ஏனெனில் அவற்றில் சர்க்கரை குறைவாக இருக்கும்.
68
ஆற்றல் பானங்கள் :
உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்க ஆற்றல் பானங்கள் அருந்தப்படுகிறது. ஆனால், இந்த பானங்களில் அதிக அளவு சர்க்கரை மற்றும் காஃபின் உள்ளது. ஒரு கேன் ஆற்றல் பானத்தில் 25 முதல் 30 கிராம் சர்க்கரை இருக்கலாம். இது நீரிழிவு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதற்கு பதிலாக, தண்ணீர், இளநீர் அல்லது மோர் போன்ற ஆரோக்கியமான பானங்களை அருந்தலாம்.
78
சலாட் டிரஸ்ஸிங் :
சலாட் ஆரோக்கியமான உணவு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கடைகளில் விற்கப்படும் சலாட் டிரஸ்ஸிங்கில் அதிக சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கப்படலாம். ஒரு தேக்கரண்டி டிரஸ்ஸிங்கில் 5 கிராம் சர்க்கரை இருக்கலாம். வீட்டிலேயே ஆலிவ் எண்ணெய், வினிகர், மிளகு, எலுமிச்சை சாறு போன்றவற்றை பயன்படுத்தி சலாட் டிரஸ்ஸிங் தயாரிக்கலாம்.
88
சாக்லேட் பால் :
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி அருந்தும் சாக்லேட் பாலில் அதிக சர்க்கரை உள்ளது. ஒரு கப் சாக்லேட் பாலில் 24 கிராம் சர்க்கரை இருக்கலாம். சாதாரண பாலை அருந்துவது அல்லது குறைந்த சர்க்கரை கொண்ட சாக்லேட் பொடியை சேர்த்து தயாரிப்பது நல்லது.