குழந்தைகள் தினமும் பால் குடிப்பது நல்லதா? விளக்கம் இதோ..!!

Published : Apr 27, 2023, 03:02 PM IST

பால் நாம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே மிகவும் ஆரோக்கியம் நிறைந்தது. வளரும் குழந்தைகள் பால் குடித்தால் உடல் நலம் சீராகும். ஆனால் குழந்தைகள் தினமும் பால் குடிப்பது நல்லதா? என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்...

PREV
15
குழந்தைகள் தினமும் பால் குடிப்பது நல்லதா? விளக்கம் இதோ..!!

வளரும் குழந்தைகளுக்கு பால் ஒரு முக்கியமான பானமாக கருதப்படுகிறது. ஏனெனில் பால்  அவர்களின் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. தினமும் ஒன்று முதல் இரண்டு கிளாஸ் பால் குடிப்பது நல்லது என்று பலர் கூறுகின்றனர். எனவே வளரும் குழந்தைக்கு கண்டிப்பாக பால் கொடுக்கப்பட்டது.  குழந்தைகள் தினமும் பால் குடிக்கலாமா?வேண்டுமா? என்று பார்ப்போம். 

25
பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

வைட்டமின்களின் களஞ்சியம்:

பாலில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு,சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன. எனவே குழந்தைகள் தினமும் பால் குடிப்பதினால் அவர்களுக்கு தேவையான சத்துக்கள் இதில் கிடைக்கும். பால், குழந்தைகளை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு பால் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.

35
எலும்புகளை வலுவாக்குகிறது:

பாலில் அதிக கால்சியம் உள்ளது. இது எலும்புகளை ஆரோக்கியமாகவும் மற்றும் சேதமடையாமலும் வைதிருக்கிறது. பாலில் வைட்டமின் 'டி'உள்ளது. 

இதையும் படிங்க: பாத அழகைக் கெடுக்கிறதா பித்த வெடிப்பு... கவலையை விடுங்க... எளிய முறையில் தீர்வு..!!

45
புரதத்தின் சிறந்த ஆதாரம்:

பால் தரமான புரதத்தின் சிறந்த மூலமாகும். ஒரு கப் பாலில் 8 கிராம் புரதம் உள்ளது. இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. பாலில் இரண்டு வகையான புரதங்கள் உள்ளன. ஒன்று கேசீன், இரண்டு மோர் புரதம். இந்த இரண்டு புரதங்களும் உயர்தர புரதங்களாகக் கருதப்படுகின்றன. பால் புரதத்தில் உடல் சரியாக செயல்பட தேவையான அனைத்து 9 அமினோ அமிலங்களும் உள்ளன.

55
பல் சொத்தையைத் தடுக்கிறது:

குழந்தைகளில் பல் சொத்தை பொதுவானது. பால், பல் பற்சிப்பியைப் பாதுகாக்கிறது மற்றும் ஈறுகளை பலப்படுத்துகிறது. பாலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. தொடர்ந்து பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பல் சொத்தை ஏற்படாது.

Read more Photos on
click me!

Recommended Stories