தினமும் ஒரு வெள்ளரி இவ்வளவு நன்மைகளா! ஆனா வெள்ளரிகாய் சாப்பிடும்போது இதை மட்டும் சாப்பிடாதீங்க!

First Published | Apr 26, 2023, 5:06 PM IST

cucumber: கோடையில் வெள்ளரிக்காய் உண்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். ஆனாலும் வெள்ளரியின் முழு பலன்களைப் பெற, சில உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.  

கோடைகாலத்தில் வெள்ளரிக்காய் (cucumber) அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். இதனை உண்பதால் கோடைகால சரும பிரச்சனைகள் நீங்கும். தாகம் தணிக்கும். கோடையை தவிர மற்ற காலங்களில் குறைவாகவே சாப்பிட வேண்டும். ஏனெனில் அவற்றில் அதிக நீர்ச்சத்து உள்ளதால், அதிகமாக உண்ணும்போது உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, பிற பிரச்சனைகள் ஏற்படும். 

வெள்ளரிக்காய் உண்பதால் தசைகள், நரம்புகளுக்கு ஆற்றல் கிடைக்கும். இது உங்கள் உடலில் உள்ள எலக்ட்ரோலைட் குறைபாட்டையும் சரிசெய்யும். இதை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால் அதன் பலன்களை முழுமையாக பெற, சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் அதன் பலன் கிடைக்காது. பல உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படும். 

Latest Videos


வெள்ளரியும் தக்காளியும்!

இந்த இரண்டும் சாலட்களில் ஒன்றாக வைத்து உண்ணப்படுகிறது. ஆனால் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. உண்மையில், இரண்டின் செரிமான செயல்முறை முற்றிலும் வேறுபட்டது. எனவே இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். குறிப்பாக வெள்ளரியும், தக்காளியும் ஒன்றாக உண்ணும்போது ​​உடலின் பி.எச் அளவானது (pH) சமநிலை இழக்கிறது. இது வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. 

வெள்ளரி, முள்ளங்கி! 

முள்ளங்கியுடன் வெள்ளரி துண்டுகளை சாலட்டில் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் இரண்டும் சேர்ந்தால் உடல் நலத்திற்கு நல்லதல்ல. வெள்ளரியில் அஸ்கார்பேட் உள்ளது. இது வைட்டமின் சியை உறிஞ்சும். அதனுடன் முள்ளங்கி சாப்பிட்டால், இந்த செயல்முறை தடைபடும். இதனால் வைட்டமின் சி கிடைப்பது சிக்கலாகும். இதனால் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. 

இதையும் படிங்க: கிரான்பெர்ரி பழம் பத்தி தெரியுமா? இதை சாப்பிட்டால் சிறுநீர் பாதை நோயை சுலபமா விரட்டலாம்.. ஆய்வில் புதிய தகவல்!

பாலுடன் வெள்ளரி! 

ஆரோக்கியமான பழங்களை பாலுடன் கலந்து சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. ஆனால் அனைத்து பழங்களையும் பாலுடன் கலக்கக்கூடாது. வெள்ளரியும், பாலும் ஒன்றாக கலந்து உண்பதால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இது வாந்தி அல்லது வயிற்றுப்போக்கிற்கு வழிவகுக்கும். 

இதையும் படிங்க: பிறந்த குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்களுக்கு ஏன் தண்ணீர் கொடுக்கக்கூடாது? அதனால் என்னாகும் தெரியுமா?

click me!