டீ குடிக்காமல் பலரால் ஒரு வேலையும் செய்ய முடியாது. ஒரு நாளைக்கு 3 முறைக்கும் மேல் டீ குடிப்பவர்களும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான பானமாக டீ உள்ளது. ஆனால் டீயை சில உணவுகளுடன் உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை உடல்நலனுக்கு ஆரோக்கியமானது அல்ல.
காரசாரமான உணவுகள்
அதிகமான காரச்சுவை கொண்ட சாப்பாட்டுடன் டீ யை அருந்தக் கூடாது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், கார சுவை நிரம்பிய உணவுகளை டீயுடன் உண்ணும்போது அதன் அசல் சுவையை உணர முடியாது. அசைவ உணவுகளில் பிரதமானமாக இருக்கும் பூண்டு, வெங்காயம் ஆகியவை கலந்த உணவுகள், குழம்பு, மிளகாய் போன்றவையுடன் டீ குடிக்கக் கூடாது. செரிமான கோளாறுகள் வரும்.
அமிலத்தன்மை அடங்கிய உணவுகள்
எலுமிச்சை ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்ளும்போது டீ அருந்தக்கூடாது. டீயில் உள்ள கேட்டசின்களை உறிஞ்சு எடுத்து கொள்வதில் இடையூறு ஏற்படும். கேட்டசின்கள் என்பவை ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் ஆகும். இவை உடலுக்கு தேவையானது. இதை உறிஞ்சுவதில் குறுக்கீடு ஏற்படும்.
அமிலத்தன்மை அடங்கிய உணவுகள்
எலுமிச்சை ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை எடுத்து கொள்ளும்போது டீ அருந்தக்கூடாது. டீயில் உள்ள கேட்டசின்களை உறிஞ்சு எடுத்து கொள்வதில் இடையூறு ஏற்படும். கேட்டசின்கள் என்பவை ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் ஆகும். இவை உடலுக்கு தேவையானது. இதை உறிஞ்சுவதில் குறுக்கீடு ஏற்படும்.
பால் பொருள்கள்
டீயில் இருக்கும் பாலிபினால்களை பால் பொருள்கள் நடுநிலையாக்கி விடுகின்றன. அதனால் அதனுடைய ஆக்ஸிஜனேற்ற பண்புகள் குறைந்துவிடுகின்றன. ஆனால் கடுங்காபி என்றழைக்கப்படும் பால் இல்லாத கருப்பு டீயில் இந்த நிகழ்வு அளவில் குறைவாகவே ஏற்படுகிறது.
வறுத்த/ பொரித்த உணவுகள்
வறுத்த அல்லது பொரித்த உணவுகளை தேநீருடன் உண்பது செரிமானத்திற்கு கடினமாக இருக்கும். நம்மை சுறுசுறுப்பாக உணர விடாமல் மந்தமாக மாற்றிவிடும். செரிமானத்திற்கு கடினமான உணவுகளுடன் எப்போதும் டீ அருந்தக்கூடாது.
இதையும் படிங்க: ஆப்பிள் பழம் கோடை காலத்தில் இவ்வளவு நல்லதா? நாளுக்கு 1 ஆப்பிள் சாப்பிட்டால்.. எந்த கோடை நோயும் வராது!
இனிப்பு பண்டங்கள்
இனிப்பு சுவை கொண்ட உணவு வகைகளான கேக், பிஸ்கட், சாக்லேட் ஆகியவற்றுடன் தேநீர் அருந்தினால் சுவை நன்றாகவே இருக்கும். ஆனால் அதிகப்படியான சர்க்கரை ரத்தத்தில் கலந்து ரத்த சர்க்கரை அளவு உயரும். இதனால் மற்ற உடல்நிலை பிரச்சினைகள் ஏற்படலாம்.
இதையும் படிங்க: கோடையில் நீர்ச்சத்து குறைபாடு எவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தும் தெரியுமா? சிறுநீரக கற்கள் முதல் பெரிய லிஸ்ட்!!
டீ- உடன் உண்ணக் கூடியவை!
டீ குடிக்கும் போது அதிக இனிப்பு இல்லாத உணவுகள் உண்பது நன்மை பயக்கும். சுவையும் அலாதியாக இருக்கும். தேநீர் நம்முடைய செரிமானத்திற்கு உதவும். ஆனாலும் சாப்பிட்ட உடனேயே அல்லது சாப்பாட்டிற்கு முன்பு தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். உணவுக்கு பின்னர் தேநீர் அருந்துவதால் செரிமானம் தாமதப்படும். டீயை உற்சாக பானமாக தேவைப்படும் சமயங்களில் மட்டும் அருந்துவது நல்லது.