கிரான்பெர்ரி பழம் பத்தி தெரியுமா? இதை சாப்பிட்டால் சிறுநீர் பாதை நோயை சுலபமா விரட்டலாம்.. ஆய்வில் புதிய தகவல்!

First Published | Apr 26, 2023, 3:01 PM IST

குருதிநெல்லி என அழைக்கப்படும் கிரான்பெர்ரி பழங்கள் சிறுநீர்ப் பாதை நோய் பாதிப்பு அபாயத்தை 50 சதவீதம் குறைக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

கோடைகாலங்களில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும். அதுவும் தொடர்ச்சியாக உடல் உஷ்ணம், நீரிழப்பு பிரச்சனைகள் இருந்தால் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) வர தொடங்கிவிடும். இதனால் தாங்க முடியாத வலி ஏற்படும். இது பல்வேறு சிறுநீர்ப்பை நோய்களுக்கும் வழிவகுக்கும். வயதானவர்கள், ஏற்கனவே சிறுநீர்ப்பை பிரச்சினைகள் உள்ளவர்களைப் போலவே மூன்றில் ஒரு பங்கு பெண்கள் சிறுநீர் பாதை தொற்றை (UTI) அனுபவிக்கிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முறையாக சிகிச்சை செய்யாவிட்டால், சிறுநீரகங்களில் மேலும் சிக்கல்களை உண்டாக்கும். இந்த நோய்களை 50 சதவீதம் குறைக்கும் ஆற்றல் கிரான்பெர்ரி (Cranberry) பழங்களுக்கு உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

கிரான்பெர்ரிகள் புளிப்பு சுவை உடையவை. இதில் அதிகமான ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் காணப்படுகின்றன. பெண்கள், குழந்தைகள், சிறுநீர் பாதை நோய்களுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு குருதிநெல்லிகள் நல்ல தீர்வாக இருக்கும். இவை அந்த நோய் அபாயத்தைக் குறைக்கும் ஆற்றல் உடையது. இந்த ஆய்வில், 8,857 பேர் பங்கேற்றனர். இதில் 50 முந்தைய சோதனைகளை மதிப்பாய்வு செய்தனர். இந்த முந்தைய சோதனைகள் ஜூஸ், மாத்திரைகள் அல்லது பொடி வடிவில் வழங்கப்படும் குருதிநெல்லிகளுடன், சிறுநீர் பாதை தொற்றின் ஆபத்து எவ்வாறு தொடர்புடையது என்பதைப் பார்த்தது.

Tap to resize

ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்றுநோயியல் நிபுணர் ஜாக்குலின் ஸ்டீபன்ஸ் இது தொடர்பாக சில விஷயங்களை தெளிவுபடுத்தினார். பெரும்பாலானவர்கள் கிரான்பெர்ரி உண்ணும்போது தொற்று பாதிப்பு குறைய தொடங்கியது என்றார். மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படும் பெண்களுக்கு அந்த நோய் உருவாகும் ஆபத்து குறைக்கப்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். குழந்தைகளுக்கும் பயனுள்ளது. 

இதையும் படிங்க: ஆப்பிள் பழம் கோடை காலத்தில் இவ்வளவு நல்லதா? நாளுக்கு 1 ஆப்பிள் சாப்பிட்டால்.. எந்த கோடை நோயும் வராது!

இந்த ஆய்வுகளில் ஒரு சிலர் மட்டுமே பக்க விளைவுகளை சந்தித்துள்ளனர். அதுவும் வயிற்று வலி தான் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை. கிரான்பெர்ரி தயாரிப்புகளை நேரடியாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது புரோபயாடிக்குகளுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்ததில் அவற்றில் கொஞ்சம் தான் வித்தியாசம் உள்ளது. நீங்கள் கிரான்பெர்ரி பழத்தை தொடர்ந்து சாப்பிடும்போது உங்களுக்கு சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு ரொம்பவும் குறைவு. 

இதையும் படிங்க: காலையில் ஈறுகளில் ரத்தம் கசியுதா? பல் துலக்கும்போது இதை கவனிச்சு பாருங்க!!

Latest Videos

click me!