Tea : உலகின் காஸ்ட்லியான டீ... தங்கத்தை விட 30 மடங்கு விலை அதிகம்! அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

Published : Jul 24, 2026, 01:24 PM IST

World's most expensive tea : உலகிலேயே மிக காஸ்ட்லியான டீ. அரிதாக கிடைப்பதால், இதன் விலை தங்கத்தை விட அதிகம். தற்போது இந்த தாய் செடிகளில் இருந்து டீ இலை பறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

PREV
15
World's most expensive tea

சாதாரணமா நாம ஒரு டீ குடிக்கணும்னா 12 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரைக்கும் செலவாகும். கடையோட தரம், பிராண்ட் பெயரைப் பொறுத்து இந்த விலை இன்னும் அதிகமாகும். ஆனா, வெறும் 20 கிராம் டீத்தூளுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல கொடுக்கணும்னு சொன்னா நம்புவீங்களா? சீனாவோட 'தா ஹோங் பாவோ' (Da Hong Pao) என்கிற ஊலாங் (Oolong) டீ விஷயத்துல இதுதான் நிஜம். இதுதான் உலகத்திலேயே மிக விலை உயர்ந்த டீ. இதன் பாரம்பரியமும், வரலாற்றுப் பெருமையும்தான் இதை டீ பிரியர்கள் மத்தியில ஒரு புதையலா மாத்தியிருக்கு.

25
'தா ஹோங் பாவோ'னா என்ன?

சீனாவின் மாண்டரின் மொழியில 'தா ஹோங் பாவோ'னா "பெரிய சிவப்பு அங்கி" (Big Red Robe) அப்படின்னு அர்த்தம். யுனெஸ்கோவோட (UNESCO) பாரம்பரிய சின்னங்கள் பட்டியல்ல இருக்கிற, சீனாவின் ஃபூஜியான் (Fujian) மாகாணத்தில் உள்ள வூயி (Wuyi) மலைப்பகுதியிலதான் இந்த டீ இலைகள் வளருது. ஊலாங் டீ வகைகளுக்கு, கிரீன் டீயோட புத்துணர்ச்சியும், பிளாக் டீயோட கடுப்பும் கலந்த ஒரு தனித்துவமான சுவை இருக்கும். ஆர்க்கிட் பூக்களின் நறுமணமும், லேசான பழ வாசனையும் இதன் ஸ்பெஷல். குடிச்சு முடிச்சதும் வாயில ஒருவித இனிப்புச் சுவை தங்கி நிற்கும்.

35
ஏன் இது உலகிலேயே காஸ்ட்லியான டீ?

இப்போதைக்கு, வூயி மலைப் பாறைகளுக்கு நடுவுல இந்த டீயோட தாய் செடிகள் (Mother Trees) வெறும் 6 மட்டும்தான் இருக்கு. பல நூறு வருஷம் பழமையான இந்த செடிகள், சீனாவின் விலை மதிக்க முடியாத தேசிய சொத்தா பார்க்கப்படுது.

தங்கத்தை விட 30 மடங்கு அதிக விலை!

ஒரு ஏலத்துல, இந்த டீயோட 20 கிராம் இலைகள் 2,08,000 யுவானுக்கு (சுமார் ₹1.23 லட்சம்) விற்பனையாச்சு. பிபிசி ரிப்போர்ட்படி, இதன் அசல் இலையோட ஒரு கிராம் விலை 1,400 டாலருக்கும் அதிகம் (சுமார் ₹1.2 லட்சம்). அதாவது, எடைக்கு எடை பார்த்தா தங்கத்தை விட 30 மடங்குக்கும் மேல விலை அதிகம்! இந்த அசல் இலையில ஒரு கப் டீ குடிக்கணும்னா கிட்டத்தட்ட ₹8.5 லட்சம் செலவாகும்.

45
2006-ல் வந்த தடையும், 142 கோடி இன்சூரன்ஸும்

இந்த அரிய வகை செடிகளை அடுத்த தலைமுறைக்காக பாதுகாக்க, 2006-ல் சீன அரசாங்கம் இந்த 6 தாய் செடிகள்ல இருந்தும் டீ இலை பறிக்க முழுமையா தடை விதிச்சிட்டாங்க. இந்த செடிகளுக்கு சீன அரசாங்கம் 100 மில்லியன் யுவான் (சுமார் ₹142 கோடி) மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாதுகாப்பும் கொடுத்திருக்கு. இந்த செடிகள்ல இருந்து கடைசியா பறிக்கப்பட்ட டீ இலைகள், பீஜிங்கில் உள்ள பேலஸ் மியூசியத்துல பத்திரமா வைக்கப்பட்டிருக்கு. இன்னைக்கு மார்க்கெட்ல கிடைக்கிற தா ஹோங் பாவோ டீ, இந்த தாய் செடிகளோட குளோன்கள் (Clones) மூலமா உருவாக்கப்பட்ட செடிகள்ல இருந்தோ, அல்லது இதே மாதிரி மற்ற விஐபி ஊலாங் டீ வகைகளைக் கலந்தோ தயாரிக்கப்படுது.

55
'பிக் ரெட் ரோப்' பெயருக்குப் பின்னால் ஒரு கதை

இந்த டீயோட பெயர் சம்பந்தமா சீனால ஒரு பழைய நாட்டுப்புறக் கதை சொல்லப்படுது. ஒருமுறை, ஒரு இளம் அறிஞர் பீஜிங்குக்கு பயணம் செஞ்சப்போ, வூயி மலைப்பகுதியில கடுமையான நோய்வாய்ப்பட்டார். இதைப் பார்த்த பக்கத்துல இருந்த கோயில் துறவி ஒருத்தர், பாறையில வளர்ந்த ஒரு ஸ்பெஷல் டீ இலையை வெச்சு டீ போட்டுக் கொடுத்தார். அதைக் குடிச்சதும் அவர் உடனே குணமடைஞ்சாராம். பின்னாடி, தன்னோட சக்கரவர்த்திக்கு உடல்நிலை சரியில்லாம போனப்போவும், இதே டீயைக் கொடுத்து குணப்படுத்தினதா கதை சொல்லுது. இதனால சந்தோஷமான சக்கரவர்த்தி, பரிசா கொடுத்த சிவப்பு நிற ராஜ அங்கியை (Red Ceremonial Robe), தன் உயிரைக் காப்பாத்தின அந்த டீ செடிக்கு மரியாதை செலுத்தும் விதமா, அந்த செடி மேல போர்த்தினாராம். அப்படித்தான் இந்த டீக்கு 'தா ஹோங் பாவோ' (பெரிய சிவப்பு அங்கி) அப்படின்னு பெயர் வந்ததா சொல்லப்படுது.

தா ஹோங் பாவோ டீ எப்படி போடுறது?

பாரம்பரியமா, சின்ன சீன களிமண் பாத்திரங்கள்லயோ (Clay Teapot) அல்லது கைவான்லயோ (Gaiwan) 95-100°C கொதிக்கிற தண்ணியை ஊத்தி இந்த டீயை தயார் செய்வாங்க. சாதாரண டீ பேக் மாதிரி இதை ஒருமுறை பயன்படுத்தி தூக்கிப் போட மாட்டாங்க. ஒருமுறை பயன்படுத்தின இலையிலயே பலமுறை தண்ணி ஊத்தி டீ போடலாம். மூணாவது, நாலாவது முறை போடும்போதுதான் இந்த டீயோட உண்மையான இனிப்பும், சுவையும் முழுசா வெளிவரும்னு சொல்றாங்க.

Read more Photos on
click me!

Recommended Stories